Advertisment

FCI Recruitment 2019: எஃப்.சி.ஐ-யின் 4103 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன

FCI Recruitment Notification 2019: fci.gov.in. என்ற தளத்தில் மார்ச் 25-ம் தேதிக்குள் இதற்கு அப்ளை செய்ய வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
FCI Recruitment 2019

FCI Recruitment Notification 2019: எஃப்.சி.ஐ எனப்படும் ஃபுட் கார்ப்பரேஷன் இந்தியா, 4103 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  fci.gov.in. என்ற தளத்தில் மார்ச் 25-ம் தேதிக்குள் இதற்கு அப்ளை செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு செய்தியில் பிப்ரவரி 23 முதல் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் பிப்ரவரி 28-ம் தேதி காலை 10 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என எஃப்.சி.ஐ இணையதளம் குறிப்பிடுகிறது.

Advertisment

காலியிட விபரங்கள்

ஜே.இ (சிவில்) – 114

ஜே.இ (எலெக்ட்ரிக்கல் மெக்கானிக்கல்) – 72

ஸ்டெனோ கிரேட் 2 – 76

அசிஸ்டெண்ட் கிரேட் 2 (இந்தி) – 44

டைபிஸ்ட் (இந்தி) – 38

அசிஸ்டெண்ட் கிரேட் 3 (ஜெனரல்) – 757

அசிஸ்டெண்ட் கிரேட் 3 (அக்கவுண்ட்ஸ்) – 509

அசிஸ்டெண்ட் கிரேட் 3 (டெக்னிக்கல்) – 720

அசிஸ்டெண்ட் கிரேட் 3 (டிப்போ) – 1773

எவ்வாறு அப்ளை செய்வது?

www.fci.gov.in தளத்தை விசிட் செய்து, அப்ளை ஆன்லைன் என்பதை க்ளிக் செய்யவும்.

Click here for New Registration என்பதை க்ளிக் செய்து, உங்களது பெயர், முகவரி, இ-மெயில் ஐ.டி ஆகியவற்றை பதிவிடவும். அப்போது வரும் ப்ரொவிஷனல் பதிவெண்ணையும், பாஸ்வேர்டையும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் குறித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் கேட்கப்பட்டிருக்கும் விபரங்களை பிழையின்றி பதிவு செய்ய வேண்டும். தந்தை/கணவர் பெயரில் எழுத்துப் பிழை இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவும்.

அனைத்தையும் பதிவு செய்த பின், Validate your details என்பதை க்ளிக் செய்யவும்.

விண்ணப்பதாரரின் ஃபோட்டோ மற்றும் கையெழுத்தை ஸ்கேன் செய்து, பதிவேற்றம் செய்யவும்.

அப்ளிகேஷனை பூர்த்தி செய்யவும்.

விண்ணப்பத்தை ஓரிரு முறை சரி பார்த்து FINAL SUBMIT கொடுக்கவும்.

Payment என்பதை க்ளிக் செய்து, பணம் செலுத்திவிட்டு, Submit பட்டனை அழுத்தவும்.

Tamil Nadu Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment