பிப்ரவரி மாதத்துக்கான ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் இன்று (மார்ச்- 8) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முடிவுகள் வெளியானதும் மாணவர்கள் தங்கள் மதிப்பெண் அறிக்கையை jeemain.nta.nic.in மற்றும் www.nta.ac.in இணையதளத்திற்கு வருகை தந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முன்னதாக, ஜேஇஇ முதன்மை தேர்விற்கான உத்தேச விடையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.
மேலும், உத்தேச விடைகள் தொடர்பாக முறையீடு செய்வதற்கான கால அவகாசமும் விண்ணப்பதாரர்களுக்கு அளிக்கப்பட்டது.
NTA JEE Main result 2021 : டவுன்லோட் செய்வது எப்படி?
nta.ac.in மற்றும் jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
முகப்புப்பக்கத்தில், ‘result/scorecard’ என்பதை கிளிக் செய்க.
ஜேஇஇ முதன்மை தேர்விற்கான பதிவு எண்ணையும், பிறந்த தேதியையும் குறிப்பிட வேண்டும்.
தேர்வு மதிப்பெண் விவரம் திரையில் தோன்றும்
தேர்வு மதிப்பெண் சீட்டைபதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
எதிர்கால தேவைக்காக மதிப்பெண் சீட்டை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிப்ரவரி மாத தேர்வுக்கு மட்டும் மொத்தம் 6.61 லட்சம் (6,61,776) விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில் 6.52 லட்சம் (6,52,627) விண்ணப்பங்கள் பிஇ/பிடெக் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தேர்வில் பங்குபெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஏறுமுகமாகவே உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 23 முதல் 26 வரை ஜேஇஇ மெயின் தேர்வு நடைபெற்ற நிலையில், தேர்வு முடிவுகள் இன்று (மார்ச்- 8) வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல் அறிக்கையில் இருந்து மேலும் விவரங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
NTA JEE Main result 2021 likely tomorrow: Five steps to download score card
இத்தேர்வில் வெற்றிபெறும் மாணவர்கள் என்ஐடி, ஐஐஐடி, சிஎஃப்டிஐ போன்ற உயர்க்கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் இளநிலை கட்டிடக்கலைஞர் (BArch), இளநிலை வடிவமைப்பாளர் (BDes),ஒருங்கிணைந்த இளநிலை மற்றும் முதுநிலை தொழில்நுட்ப பட்டங்கள், ஒருங்கிணைந்த முதுநிலை அறிவியல் பட்டம் பாடதிட்டங்களுக்கும் சேர தகுதி பெறுகிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil