இறுதிப்பருவம் / இறுதியாண்டுத் தேர்வுகளைப் பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்கள் செப்டம்பர் இறுதிக்குள் ஆஃப்லைன் (பேனா மற்றும் பேப்பர்) / ஆன்லைன் / இரண்டும் கலந்தது (ஆன்லைன் + ஆஃப்லைன்) முறையில் நடத்த வேண்டும் என்று யுஜிசி அறிவித்தது.
பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரையின்படி, திறந்த புத்தக தேர்வு (Open Book Examination)முறையை பயன்படுத்த இருப்பதாக சென்னை பல்கலைகழகம், புதுச்சேரி பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைகழகங்கள் அறிவித்துள்ளது.
மேலும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகமும் பி.எட், எம்.எட், எம்.பில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு திறந்த புத்தக தேர்வு முறையை பின்பற்ற இருப்பதாக தெரிவித்தது. விடைகளை 40 பக்கத்திற்கு மிகாமல் எழுதி கல்லூரி முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்தது.
முன்னதாக கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளின் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளைத் தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பலனிசாமு அறிவித்தார்.
இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு வருகிற 22 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் முன்னதாக அறிவித்தது.
சர்வதேச அளவில் மாணவர்களுடைய கல்வித்தரம், பணிவாய்ப்புகள் மற்றும் எதிர்கால முன்னேற்றம் ஆகியவற்றை உறுதிப்படுத்த தேர்வுகள் இன்றியமையாது என்று யுஜிசி தனது வழிமுறையில் தெரிவித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil