டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையைப் பெற்ற மதுரையைச் சேர்ந்த ஸ்வப்னா, வணிக வரித்துறையில் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரிசிக்கு பதிலாக பணம் – புதுவை துணைநிலை ஆளுநர் உத்தரவு செல்லும் என ஐகோர்ட் தீர்ப்பு
அலங்காநல்லூரில் பிறந்த ஸ்வப்னா, பள்ளியில் படிக்கிற காலத்திலிருந்தே ஊர்க்கார்களின் ஏளனத்துக்கும் இழிவுக்கும் ஆளான நிலையிலும் அதைப்பற்றி கவலைப்படாமல் கல்வி ஒன்றே மாற்றத்தைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து கல்வியில் கவனம் செலுத்திவந்தார். பி.ஏ பட்டம் பெற்ற பின் அரசின் போட்டித்தேர்வில் பங்கு பெற பயிற்சி எடுக்கத் தொடங்கினார்.
&
Congratulations to Swapna senior trans education activist, 1st openly Transgender person who cleared State Civil Service, there was a time when we stood together for this cause, Happy to see ur appointment as Asst Commissioner for Commercial Tax Dept, sad u missed SCollector post pic.twitter.com/ut19fN5sRV
— Gopi Shankar Madurai (@gopishankarmdu) February 20, 2020
;
2013-ல் முதல் முறையாக டி.என்.பி.சி. குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்தபோது அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். டி.என்.பி.எஸ்.சி தேர்வில் திருநங்கைகளை அனுமதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட இவருடைய வழக்கே காரணமானது.
2018-ல் நடந்த குரூப்-2 தேர்வை எழுதி வெற்றி பெற்றவர், வணிகவரித்துறை அலுவலராகப் பணியில் சேர்ந்தார். இருந்தாலும் அவருடைய போட்டித்தேர்வு ஆர்வம் குறையவில்லை. குரூப்-1க்கு தயாரானவர் தரவரிசைப் பட்டியலில் 228-வது ரேங் எடுத்து வெற்றி பெற்றார். இந்நிலையில், ஸ்வப்னா வணிக வரித்துறையில் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மீம்ஸ்களின் மூலம் மாணவர்களின் தேர்வு பயத்தை போக்க புது முயற்சி : வெல்டன் சிபிஎஸ்இ
“உங்கள் அனுதாபமோ, கருணையோ எனக்குத் தேவையில்லை. உங்களுடன் போட்டிபோடக்கூடிய சம உரிமையை வழங்கினாலே போதும்; வெற்றிபெற்றுக் காட்டுவேன்” என்ற லட்சியத்துடன் கடந்த சில காலமாகத் திருநங்கைகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைக்காகப் போராடி வருகிறார்.
கல்வி ஒன்றுதான் சமூகத்தில் அங்கீகாரத்தையும் அதிகாரத்தையும் கொடுக்கும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, தனது அடுக்கட்ட பயணத்தை நோக்கி முன்னேறிக் கொண்டே இருக்கிறார் ஸ்வப்னா.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook
Web Title:First transgender passed civil service exam asst commissioner for commercial tax dept