பொறியியல் கலந்தாய்வு அக்டோபர் மாதத்துடன் முடிவடைய உள்ளதால், நவம்பர் முதல் வாரத்தில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் (DOTE), நடத்தி வருகிறது. முதல் கட்ட கலந்தாய்வு ஆரம்பமாகியுள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் படித்த 7.5% ஒதுக்கீட்டைப் பெறும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடைமுறைகள் முடிந்துவிட்டது.
தற்போது, பொதுப் பிரிவில் உள்ள மாணவர்களுக்கு முதல் சுற்று ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. அக்டோபர் 5 ஆம் தேதி அவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு செய்யப்படும். இரண்டாம் சுற்று கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள், அக்டோபர் 9 அன்று தற்காலிக ஒதுக்கீட்டைப் பெறுவார்கள். அதேபோல், மூன்றாவது சுற்று கவுன்சிலிங்கிற்கு வரும் விண்ணப்பதாரர்களுக்கு அக்டோபர் 13 ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீடு கிடைக்கும். அதேபோல், இறுதி மற்றும் நான்காவது சுற்று கவுன்சிலிங்கில் உள்ள மாணவர்கள் அக்டோபர் 17 ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீட்டைப் பெறுவார்கள்.
இந்த கல்வியாண்டில் நான்கு சுற்று கவுன்சிலிங்கில் மொத்தம் 1,36,973 மாணவர்கள் பங்கேற்பார்கள். மேலும், இந்த ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 476 கல்லூரிகளில் 1,51,870 இடங்களுக்கு 1,38,531 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
இந்த நிலையில், பொது கவுன்சிலிங்கிற்குப் பிறகு, துணை கவுன்சிலிங் நடத்தப்படும் என்று DOTE அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும், "அனைத்து சேர்க்கை நடைமுறைகளும் அக்டோபர் 25 ஆம் தேதி முடிவடையும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், விரும்பிய பொறியியல் இடங்களைப் பெற்ற மாணவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் உடனடியாக சேர அறிவுறுத்தப்படுவார்கள். அதன்படி, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் முதல் வாரத்திலிருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறியியல் கலந்தாய்வு முடிந்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். கூடுதலாக, புதிய மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளை நடத்தும் அனைத்து கல்லூரிகளுக்கும் புதிய நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOP) வழங்கப்படும்,” என்று அந்த அதிகாரி கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil