கொரோனாவால் கடந்தாண்டு ஒதுக்கிவைக்கப்பட்ட நீட் தேர்வு, இந்தாண்டு செப்டம்பர் 12 ஆம் தேதியன்று நடைபெற்றது. நாடு முழுவதும் 16.10 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
நீட் தேர்வு முடிவுகளை விரைவில் தேசிய தேர்வுகள் முகமை வெளியிடவுள்ளது. ஆனால், அதற்கு முன்னதாக, ஆன்சர் கீ வெளியிடப்படும். அதன் மூலம், மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை மதிப்பாய்வு செய்துகொள்ளலாம்.
ஆன்சர் கீயில் சந்தேகம் இருக்கும் பட்சத்தில், தேர்வு எழுதியவர்கள் என்டிஏ இணையதளம் வாயிலாகத் தேர்வாணையத்தை சேலஞ்ச் செய்யலாம். குறிப்பிட்ட கேள்விக்கு, விரிவான பதிலுடன் அவர்களுக்கு அனுப்ப வேண்டும். இந்த செயல்முறைக்கு ஆன்லைனில் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். சேலஞ்ச் செய்தவரின் பதில் சரியாக இருக்கும் பட்சத்தில், அந்த விடை ஆன்சர் கீயில் திருத்தப்பட்டு பைனல் கீ என்டிஏ தளத்தில் வெளியிடப்படும். ஏனென்றால், பைனல் ஆன்சர் கீ வெளியான பிறகு, தேர்வு முடிவுகளை மாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் நீட் தேர்வின் பேஸ் 2 பதிவு முறை, neet.nta.nic.in என்கிற இணையதளத்தில் தொடங்கவுள்ளது.
தேர்வு முடிவுகளுக்கு முன்பும், பிறகும் விண்ணப்பதாரர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய 5 முக்கிய குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. தேர்வு முடிவுகள் வெளியாகுவதற்கு முன்பு, விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வின் இரண்டு கட்ட ரெஜிஸ்ட்ரேஷன் பிராசஸை கட்டாயம் முடித்திட வேண்டும். மாணவர்கள் தங்கள் தரவை விரைவாகச் சமர்ப்பிக்க உதவுவதற்காக, இந்தாண்டு ரெஜிஸ்டர் செயல்முறை இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டப் பதிவின் போது நிரப்பப்பட வேண்டிய விவரங்களை மாணவர்கள் என்டிஏயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.
2. மாணவர்கள் ஆன்சர் கீயுடன் வினாத்தாள் மற்றும் ரெய்பான்ஸ் ஷூட்களையும் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆன்சர் கீ மூலம் மதிப்பெண்ணைக் கணக்கிட முடியும். தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் தொடர்பாக சந்தேகம் இருந்தால் அல்லது ஆன்சர் கீயில் குழப்பம் இருந்தாலோ, மேலே கூறியது போலவே என்டிஏ-இடம் கேள்வி கேட்க அனுமதிக்கப்படுவீர்கள்.
3. இன்னும் ஆன்சர் கீ, தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இருப்பினும், மாணவர்கள் தங்களது ஞாபக சக்தி மூலம், கேள்விக்கு அளித்த பதிலை நினைவுகூர்ந்து தோராயமான மதிப்பெண்ணைக் கணக்கிட வேண்டும். பின்னர், என்டிஏ தளத்தில் உள்ள கல்லூரிகள் மதிப்பெண்ணுக்கு ஏற்ற சேர்க்கை கிடைக்கும் கல்லூரிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
4. தேர்வு முடிவு வெளியீடு அன்று, என்டிஏ தளத்தில் இருந்து நீட் ரேங்க் கார்ட் டவுன்லோடு செய்துகொள்ளுங்கள். முடிவுகளுடன், நீட் 2021 கட்-ஆஃப் மற்றும் அனைத்து இந்திய தரவரிசை பட்டியலும் வெளியிடப்படும். மேலும், தேர்வு முடிவுகள் அன்று தான் ஆன்சர் கீ பைனல் பதிப்பு வெளியாகும்.
5. நீட் முடிவை தொடர்ந்து, மாணவர்கள் அகில இந்திய மற்றும் மாநில ஒதுக்கீடுகளின் கீழ் கவுன்சிலிங்கில் பங்கேற்று விருப்பமான மருத்துவக் கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்து கட்டணத்தை செலுத்த வேண்டும். தற்காலிக ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியான பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் சேர்க்கை குறித்து சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.