11, 12-ம் வகுப்பு பொதுத்தோ்வு: திருச்சி பறக்கும்படையில் 220 போ் நியமனம்

திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 220 பேர் பறக்கும் படையினராக செயல்படப்போவதாக முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Trichy exam

திருச்சி மாவட்டத்தில், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Advertisment

திருச்சி மாவட்டத்தில், 11 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 5-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரையும், 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது. தோ்வு நடைபெறும் நாளன்று 34 வழித்தட அலுவலா் மூலம் 131 தோ்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படும். 131 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 131 துறை அலுவலா்கள் மற்றும் 21 கூடுதல் துறை அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். 

மேலும், 220 பறக்கும் படையினா் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மற்றும் லால்குடி கல்வி மாவட்டத்தில் உள்ள தோ்வு மையங்களுக்கான முதன்மைக் கண்காணிப்பாளா்கள் 131 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். மேலும், திருச்சி கல்வி மாவட்டத்தில் 1023 அறைக் கண்காணிப்பாளா்கள் நியமனம் பெற்றுள்ளனா். லால்குடி கல்வி மாவட்டத்தில் 621 அறைக் கண்காணிப்பாளா்கள் நியமனம் பெற்றுள்ளனா். 

திருச்சி வருவாய் மாவட்டத்தில் 1644 அறைக் கண்காணிப்பாளா்கள் நியமனம் பெற்றுள்ளனா். அறைக் கண்காணிப்பாளா்களுக்கு அவரவா் பள்ளிக்கு நியமன ஆணை தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டது. சொல்வரை எழுதுபவா் 720 போ் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

Advertisment
Advertisements

பறக்கும்படை உறுப்பினா்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்  வழங்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா தலைமையில் ஆலோசனை வழங்கப்பட்டன. 

செய்தி - க. சண்முகவடிவேல்

Education Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: