மே 5 ஆம் தேதி நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET UG 2024) வினாத்தாள் கசிவின் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களில் ஒருவர் பீகார் காவல்துறையிடம், தேர்வுக்கு ஒரு நாள் முன்னதாக இரவில் நான்கு மாணவர்கள் நான் தேர்ந்தெடுத்த இடத்தில் கூடினர், மேலும் வினாத் தாளில் இருந்த கேள்விகளுக்கான பதில்களை "மனப்பாடம்" செய்துக் கொண்டனர் என்று தெரிவித்துள்ளார்.
பதில்களைத் தீர்த்து மனப்பாடம் செய்ததாகக் கூறப்படும் நான்கு பேரில் ஒருவர், முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான அவரது உறவினர், தேர்வுக்கு முன்னதாக நீட் வினாத்தாளை ஏற்பாடு செய்யலாம் என்று உறுதியளித்ததை அடுத்து, கோட்டாவிலிருந்து பாட்னாவுக்குச் சென்றதாக காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்தார்.
இந்த வாக்குமூலங்கள் தேர்வுக்குப் பிறகு மே 5 அன்று பாட்னாவில் உள்ள சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டன, அங்கு வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஒரு தேர்வு நடத்தும் நிறுவனம், கொள்கையின்படி, வினாத் தாள் கசிவுக்கான ஆதாரத்தின் பேரில் தேர்வை ரத்து செய்யும் அதே வேளையில், வினாத் தாள் கசிவுகள் கண்டறியப்பட்டவுடன் கடந்த காலத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஒரே மாதிரியாக இல்லை.
உதாரணமாக, 2018 ஆம் ஆண்டில், வாட்ஸ்அப்பில் வினாத்தாள் கசிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டவுடன், அரசாங்கம் 12 ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ பொருளாதார பாடத்திற்கான போர்டு தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்தியது. இருப்பினும், 10 ஆம் வகுப்பு கணிதத் தாள் கசிந்தது, அதை அரசாங்கம் ஒப்புக் கொண்டது, ஆனால் அதை மீண்டும் நடத்தவில்லை. டெல்லி, பாட்னா மற்றும் பஞ்ச்குலா பிராந்தியங்களில் உள்ள மாணவர்களின் முடிவுகள் பகுப்பாய்வை மேற்கோள் காட்டி, அது தேர்வு முடிவுகள் அல்லது வழக்கத்திற்கு மாறான நன்மைகளில் எந்த ஏற்றத்தையும் காட்டவில்லை என்பதைக் காட்டுகிறது.
தேசிய தேர்வு முகமை தலைவர் சுபோத் சிங், பீகார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மாணவர்களின் வாக்குமூல அறிக்கைகளை அடுத்து நீட் வினாத்தாளை தேசிய தேர்வு முகமை ரத்து செய்யுமா என்று கேட்கும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திக்கு பதிலளிக்கவில்லை.
இது தொடர்பாக பீகார் போலீசார் 13 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் தற்போது பாட்னா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட 13 பேரின் வாக்குமூலங்களும் சி.ஆர்.பி.சி (CrPC) பிரிவு 161 இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவை நீதிமன்றத்தின் முன் ஏற்றுக்கொள்ளப்படாது.
அதேநேரம், வழக்கை எடுத்துக் கொண்ட பொருளாதார குற்றப்பிரிவு (EOU), CrPC பிரிவு 164 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட எவரிடமும் இன்னும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை, இது நீதிமன்றத்தின் முன் ஏற்றுக்கொள்ளக்கூடியது, ஏனெனில் இந்த அறிக்கைகள் நீதித்துறை அதிகாரி முன்னிலையில் பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
நான்கு மாணவர்கள் உட்பட குற்றம் சாட்டப்பட்ட 13 பேர் மீதும் ஐ.பி.சி பிரிவுகள் 407, 408 மற்றும் 409 ஆகியவற்றின் கீழ் குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் 120 பி குற்றவியல் சதியைக் கையாளுதல், ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாட்னாவில் உள்ள கோபால்பூரில் வசிக்கும் நிதீஷ் குமார் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் நான்கு "செட்டர்களில்" ஒருவராகக் கூறப்படுகிறது. நிதீஷ் குமார் மே 5 அன்று சாஸ்திரி நகர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ரெஜ் நாராயண் சிங்கிடம் கூறியது: “எனது நண்பர், பாட்னாவின் டானாபூரில் வசிக்கும் சிக்கந்தர் பி யாத்வேந்து, பாட்னா நகராட்சி கவுன்சிலில் ஜூனியர் இன்ஜினியராக உள்ளார். எனது நண்பர் அமித் ஆனந்துடன் சில தனிப்பட்ட வேலைகள் தொடர்பாக சிக்கந்தர் யாத்வேந்துவின் டானாபூர் அலுவலகத்தில் அவரைச் சந்தித்தேன். உரையாடலின் போது, அமித்தும் நானும் யாத்வெந்துவிடம், எந்தவொரு போட்டித் தேர்வுகளின் வினாத் தாள்களையும் கசியவிடலாம் என்று கூறினோம். இதில், நீட் தேர்வுத் தாள் கசிவு குறித்து யாத்வேந்து கேட்டார். ஒரு மாணவருக்கு ரூ.30-32 லட்சம் செலவாகும் என்று கூறினோம்.”
“யாத்வேந்து எங்களுக்கு நான்கு மாணவர்களைத் தருவதாகச் சொன்னார். மே 4 ஆம் தேதி இரவு அமித் நான்கு மாணவர்களை அழைத்து, கசிந்த வினாத்தாளுக்கு விடைக்களை கண்டுபிடிக்கவும், அதன் பதில்களை மனப்பாடம் செய்துக் கொள்ளவும் செய்தார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாட்னாவின் ராஜ்பன்ஷி நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து எரிந்த வினாத்தாள்களை போலீசார் மீட்ட பின்னர், யாத்வேந்து முதலில் கைது செய்யப்பட்டார், அங்கு நான்கு மாணவர்களுக்கு கசிந்த வினாத்தாள்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நிதிஷ்குமார், அமித் ஆனந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பீகார் பப்ளிக் சர்வீசஸ் தேர்வில் வினாத் தாள் கசிந்ததாகக் கூறப்படும் வழக்கிலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் சிறையில் அடைக்கப்பட்டதாக நிதிஷ் குமார் கூறினார்.
கைது செய்யப்பட்ட நான்கு தேர்வாளர்களில் சமஸ்திபூரைச் சேர்ந்தவரும், கோட்டாவில் நீட் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தவருமான ஒருவர் போலீஸிடம் அளித்த வாக்குமூலத்தில், யாத்வேந்து “நீட் வினாத் தாள் கிடைக்கும் என்று உறுதியளிக்கும் வகையில் பாட்னாவுக்கு வருமாறு என்னிடம் கூறினார். மே 4 இரவு அமித் ஆனந்த் மற்றும் நிதிஷ் குமாருடன் ஒரு இடத்தில் இறக்கிவிடப்பட்டதாக அவர் கூறினார், “நீட் தேர்வின் வினாத்தாள் மற்றும் விடைத்தாள் கொடுக்கப்பட்டது. இரவில் வினாத்தாளை படிக்கவும் மனப்பாடம் செய்யவும் சொன்னார்கள். எனது தேர்வு மையம் டி.ஒய்.பாட்டீல் பள்ளியில் இருந்தது. மனப்பாடம் செய்யப்பட்ட வினாத்தாள் தேர்வில் வந்த அதே கேள்விகள் அடங்கிய வினாத்தாள்தான்” என்று கூறினார்.
கைது செய்யப்பட்ட 13 பேர்:
* சிக்கந்தர் பி யாத்வேந்து (56): பீகார் அரசாங்கத்தின் நகர மற்றும் திட்டமிடல் துறையின் இளநிலைப் பொறியாளரான அவர், இரண்டு உறவினர்கள் உட்பட மூன்று மாணவர்களை இரண்டு "முக்கிய அமைப்பாளர்கள்" நிதிஷ் குமார் மற்றும் அமித் ஆனந்த் ஆகியோருக்கு அறிமுகப்படுத்தினார். சிக்கந்தருடன் தொடர்புடையவர் என்று சின்ஹா கூறிய தேஜஸ்வியின் உதவியாளர் பிரீதம் குமாரிடம் எந்தத் தொடர்பையும் காவல்துறை கண்டறியவில்லை.
* பிட்டு குமார் (38): சிக்கந்தர் யாத்வேந்துவின் ஓட்டுநர். இவர் ரோஹ்தாஸ் மாநிலம் பர்ககான் பகுதியில் வசிப்பவர்.
* பாட்னாவின் கோபால்பூரில் வசிக்கும் கயாவைச் சேர்ந்த நிதீஷ் குமார் (32), வினாத்தாளைத் தேடும் மாணவர்களைத் தேடும் இரண்டு “முக்கிய அமைப்பாளர்களில்” ஒருவர் என்று கூறப்படுகிறது.
* முங்கரில் உள்ள மங்கள் பஜாரைச் சேர்ந்த அமித் ஆனந்த் (29), இவர் பாட்னாவின் சாஸ்திரிநகரில் வசித்து வருகிறார், அங்கு மே 5 அன்று வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டது. வினாத்தாள் கசிவின் மூளையாக இருந்தவர்களில் ஆனந்தும் ஒருவர் என்று கூறப்படுகிறது. .
* பாட்னா ராஜீவ் நகரில் நாலந்தா ஏகங்கர்சரையைச் சேர்ந்தவர் ரோஷன் குமார் (35). அவர் அமித் ஆனந்தின் கூட்டாளி என்று கூறப்படுகிறது. வினாத்தாளை வாங்கும்படி தேர்வர்களை வற்புறுத்துவது அவரது பங்கு என்று கூறப்படுகிறது.
* பாட்னா ராஜீவ் நகரில் வசிக்கும் ஜமுய் பகுதியை சேர்ந்தவர் அசுதோஷ் குமார் (30). அவர் "முக்கிய அமைப்பாளர்" அமித் ஆனந்தின் கூட்டாளி என்று கூறப்படுகிறது.
* பாட்னாவின் டானாபூரைச் சேர்ந்த ஒரு மாணவர், "முக்கிய செட்டர்களை" அணுகியதாகக் கூறப்படுகிறது.
* குற்றம் சாட்டப்பட்டவர்களில் ராஞ்சியைச் சேர்ந்த மாணவர் ஒருவர். அவர் சிக்கந்தர் வழியாக "முக்கிய செட்டர்களை" அணுகியதாக கூறப்படுகிறது.
* சமஸ்திபூரில் உள்ள ஹசன்பூரில் இருந்து ஒரு மாணவர். அவர் சிக்கந்தருக்குத் தெரிந்தவர் என்று கூறப்படுகிறது.
* கயாவிலிருந்து ஒரு மாணவர்.
* பாட்னாவின் டானாபூரில் இருந்து ஒரு மாணவரின் தந்தை. வினாத்தாளின் இரண்டு "முக்கிய செட்டர்களை" அவர் அணுகியதாகக் கூறப்படுகிறது.
* குற்றம் சாட்டப்பட்ட மாணவரின் தந்தை.
* சிக்கந்தருக்கு நெருக்கமான மாணவரின் தாய்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.