நாகர்கோவில் திருப்பதிசாரம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் இலவசமாக நடத்தப்படுகிறது.
தேனீக்கள் மற்றும் பிற மகரந்தச் சேர்க்கைகள் சுற்றுச்சூழல் அமைப்பின் செயல்பாட்டிற்கு இன்றியமையாதவை மற்றும் பல்வேறு வகையான பழங்கள், கொட்டைகள் மற்றும் விதைகள் உற்பத்திக்கு உதவுகின்றன. இந்த அம்சத்தை மனதில் கொண்டு தேனீ வளர்ப்பு ஒரு இன்றியமையாத வேலை ஆகும்.
தற்போது நாகர்கோவில் திருப்பதிசாரம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் இலவசமாக நடத்தப்படுகிறது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க தேனீ வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கிராமப்புற இளைஞர்கள் தொழில் முனைவோராக பணியாற்றுவதற்கு தேனீ வளர்ப்பு பயிற்சி மிகவும் இன்றியமையாதது. தேனீ வளர்ப்பு தேன் உற்பத்திக்கு மிகவும் முக்கியமானது. இந்தியாவில், தேன் மருத்துவ நோக்கங்களுக்காகவும், மேற்கத்திய நாடுகளில் தினசரி உணவாகவும், அதன் ஊட்டச்சத்து மதிப்புக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தேனீ வளர்ப்பு மிகவும் அழகான கலை, அதை நன்கு அறிந்தால் மட்டுமே அதை சிறப்பாக செய்ய முடியும், எனவே விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு நாங்கள் நிறைய பயிற்சிகளை வழங்குகிறோம், ஆராய்ச்சி நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாபகரமான இந்த தேனீ வளர்ப்பு மூலம், லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டலாம். விருப்பமுள்ளவர்கள் தேனீ வளர்ப்பு குறித்த இலவச பயிற்சியில் கலந்துக் கொண்டு பயன்பெறுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“