2024-ம் ஆண்டில் பல்வேறு முன்னணி ஐ.டி நிறுவனங்களில் 80,000க்கும் மேற்பட்ட Freshers-களுக்கான பணியிடங்கள் நிரப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட துறையில் முன்அனுபவம் இல்லாத பணியாளர்களை வேலைக்கு எடுத்து பயிற்சி அளிப்பதாக கூறப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் டி.சி.எஸ், இன்போசிஸ், ஹெச்.சி.எல் போன்ற நிறுவனங்கள் Freshers ஆட்சேர்ப்பு செய்ய உள்ளன. இந்தாண்டு கல்லூரி படிப்பு முடிப்பவர்கள், சமீபத்தில் படிப்பு முடிப்பவர்கள் , ஐ.டி துறையில் பணிபுரிய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தாண்டில் டி.சி.எஸ், இன்போசிஸ், ஹெச்.சி.எல் டெக், விப்ரோ, டெக் மகேந்திரா ஆகிய நிறுவனங்கள் 81,000- 88,000 ப்ரெஸ்சர்ஸ்களை (புதுமுகங்களை) பணியில் அமர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டி.சி.எஸ்- 40,000; இன்போசிஸ்-15,000-20,000; ஹெச்.சி.எல் டெக்- 10,000; விப்ரோ-10,000-12,000; டெக் மகேந்திரா- 6,000 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“