Advertisment

கேட், க்ளாட் முதல் சி.ஏ வரை; நவம்பர், டிசம்பரில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளின் பட்டியல் இங்கே

CAT 2023 நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் மற்றும் AIBE மற்றும் AILET தேர்வுகள் டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெற உள்ளன. நவம்பர் மற்றும் டிசம்பர் 2023 இல் நடத்தப்படும் பிற நுழைவுத் தேர்வுகளின் பட்டியல் இங்கே

author-image
WebDesk
New Update
entrance exams

நவம்பர் மற்றும் டிசம்பர் 2023 இல் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளின் பட்டியல் இங்கே.

நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் நவம்பர் மற்றும் டிசம்பரில் பல நுழைவுத் தேர்வுகளை எழுதுவார்கள். ஆண்டுதோறும் நடத்தப்படும் கேட் 2023 தேர்வு நவம்பர் 26 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், சட்டப் படிப்பு நுழைவுத் தேர்வுகளான CLAT, AILET மற்றும் AIBE ஆகியவை டிசம்பரில் நடத்தப்படும்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: From CAT 2023 to CLAT, here is the list of competitive exams set for November, December

மேலும், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு இடையே ஒத்திவைக்கப்பட்ட ICAI CA தேர்வுகள் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.

நவம்பர் மற்றும் டிசம்பர் 2023 இல் நடைபெறவிருக்கும் நுழைவுத் தேர்வுகளின் பட்டியல் இதோ.

CAT 2023 நவம்பர் 26 அன்று நடைபெறும். இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (IIMகள்) மற்றும் பிற பங்கேற்கும் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் வணிகப் படிப்புகளில் சேருவதற்கு பொது நுழைவுத் தேர்வு (CAT) நடத்தப்படுகிறது. CAT 2023 தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் iimcat.ac.in இணையதளத்தில் மாதிரி தேர்வுகளை எழுதிப் பார்க்கலாம்.

CAT 2023 தேர்வு முறையின்படி, வினாத்தாள் VARC, DILR மற்றும் Quantitative Aptitude ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டிருக்கும். தேர்வுக்கான கால அளவு 120 நிமிடங்கள். ஒவ்வொரு பிரிவிலும் உள்ள கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு விண்ணப்பதாரர்களுக்கு சரியாக 40 நிமிடங்கள் ஒதுக்கப்படும், மேலும் ஒரு பிரிவில் உள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பகுதிக்கு மாற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

CLAT 2024: பொது சட்ட நுழைவுத் தேர்வு (Common Law Admission Test (CLAT)) 2024 தேர்வு தேதி டிசம்பர் 3, 2023 ஆகும். தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு (NLUs) 24 NLUகள் மற்றும் பிற பங்கேற்கும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை (UG) மற்றும் முதுகலை (PG) சட்டப் படிப்புகளில் சேருவதற்கு CLAT தேர்வை நடத்துகிறது.

CLAT UG 2024 மற்றும் CLAT PG 2024 ஆகியவை 120 கேள்விகளுக்கு நடைபெறும். CLAT 2024 தேர்வை முடிக்க விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு மணிநேரம் கிடைக்கும்.

AILET 2024: டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் (NLU Delhi) LLB, LLM மற்றும் PhD உள்ளிட்ட சட்டப் படிப்புகளுக்கு மாணவர்களைச் சேர்க்க ஆண்டுக்கு ஒருமுறை அகில இந்திய சட்ட நுழைவுத் தேர்வு (AILET) நடத்தப்படுகிறது.

AILET 2024 விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் சமர்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 15 ஆகும், தேர்வு டிசம்பர் 10 அன்று நடத்தப்பட உள்ளது. AILET 2024 அட்மிட் கார்டு வெளியீட்டு தேதி நவம்பர் 20 ஆகும்.

AMU PhD நுழைவுத் தேர்வு: அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் PhD நுழைவுத் தேர்வு நவம்பர் 15 முதல் 23 வரை திட்டமிடப்பட்டுள்ளது.

AIBE XVIII: அகில இந்திய பார் கவுன்சில் தேர்வு (AIBE) 18 டிசம்பர் 10 அன்று நடத்தப்பட உள்ளது. இந்திய பார் கவுன்சில் (BCI) AIBE ஐ நடத்துகிறது. தேசிய அளவிலான சான்றிதழ் தேர்வாக நடத்தப்படும் AIBE, சட்டப் பட்டதாரிகளுக்காக அல்லது இறுதியாண்டு அல்லது இறுதி செமஸ்டரில் உள்ள சட்டப் பட்டதாரிகளுக்காக நடத்தப்படுகிறது. AIBE க்கு தகுதி பெறும் தேர்வர்கள் பயிற்சி சான்றிதழ் (COP) பெறுவார்கள். தேர்வர்கள் இந்தியாவில் உள்ள நீதிமன்றத்தில் பயிற்சி பெற COP உதவுகிறது.

ICAI CA நவம்பர் 2023 தேர்வுகள்: இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) CA இறுதி மற்றும் இடைநிலைத் தேர்வுகளை நடத்துகிறது. சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் ஒரு சில தேர்வுகள் சட்டசபை தேர்தல்களுக்கு மத்தியில் ஒத்திவைக்கப்பட்டாலும், மற்ற அனைத்து தேர்வு தேதிகளும் அப்படியே உள்ளன. சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் சில குறிப்பிட்ட தேர்வு மையங்களில் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் இப்போது நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment