Gate 2020 Admit Card : கிராச்சுவேட் ஆப்டிட்யூட் டெஸ்ட் எனப்படும் ‘கேட்’ தேர்வு பிப்ரவரி 1, 2, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு பதிவு செய்திருக்கிற 8.6 லட்சம் பேருக்குமான ’அட்மிட் கார்டு’ இன்று வழங்கப்படும். அட்மிட் கார்டில் தேர்வு நடக்கும் இடம், நேரம், பாடக் குறியீடு போன்ற தேர்வு சார்ந்த விபரங்கள் இருக்கும். கேட் தேர்வு எழுத, இந்த அட்மிட் கார்டு மிக முக்கியம்.
இந்த கேட் தேர்வின் அட்மிட் கார்டை GOAPS போர்டலில் பெற்றுக் கொள்ளலாம். அட்மிட் கார்டுகளின் பிரிண்டெட் காப்பி எதுவும் தேர்வர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. “அட்மிட் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள மையம் / தேதி / நேரத்தில் எந்த மாற்றங்களையும் செய்ய முடியாது. மிக முக்கியமான தேர்வாக கருதப்படும் இதற்கு, சிறப்பு வசதி அல்லது குறிப்பிட்ட வசதி தேவைப்படும் தேர்வர்களுக்கு அவற்றை சாத்தியப்படுத்த முடியாது. எனவே, கேட் தேர்வுக் குழுவின் வரம்பு மற்றும் சாத்தியமான வசதிகளை கடைப்பிடிக்குமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என கேட் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
அட்மிட் கார்டில் உள்ள புகைப்படம் தேர்வு நாளில் தேர்வாளரின் தோற்றத்துடன் பொருந்த வேண்டும். இதை உறுதிப்படுத்த, லேசர் அச்சுப்பொறியைப் பயன்படுத்தி A4 அளவிலான காகிதத்தில் அட்மிட் கார்டை அச்சிடுங்கள், எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் மற்றவர்களின் உதவியுடன் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு 20 நிமிடம் கூடுதலாக தரப்படும். கேட் கணினி அடிப்படையிலான தேர்வாக இருப்பதால், கணினி திரையில் உள்ளடக்கத்தை பெரிதாக்கப்பட்ட எழுத்துருவில் காண விண்ணப்பதாரருக்கு அனுமதி வழங்கப்படும். பரீட்சைக்கு ஒரு நாள் முன்னதாக தேர்வு மையத்தைப் பார்வையிடவும் ஏற்பாடுகளை அறிந்து கொள்ளவும் தேர்வர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook
Web Title:Gate 2020 admit card goaps download gate exam
என் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை
கட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி
சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி
யாராலும் தமிழக மக்களை விலைக்கு வாங்க முடியாது: ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை