அபாஷ் ராய் என்ற 22 வயதான மாணவர் 2020 பொறியியலுக்கான பட்டதாரி ஆப்டிடியூட் தேர்வில் (கேட் தேர்வில்) மின் பொறியியல் தாளில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் தனது குடும்பத்தைப் பற்றிய கனவுகளை நிறைவேற்றுவென் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார். பாட்னா என்.ஐ.டி மாணவரான அபாஷ் ராய் கேட் தேர்வில் 87.33 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நுழைவுத் தேர்வுக்கு 25 தாள்களில் 6.85 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருந்தனர்.
உத்தரபிரதேசம் மாநிலம், பலியாவில் உள்ள நாராயன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அபாஷ், முக்கிய மின் துறையில் வேலை பெற விரும்புகிறார். “நான் இரண்டு காலியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளேன், இப்போது என் குடும்பத்திற்காக நான் கண்ட கனவுகளை நிறைவேற்ற முடியும் என்று தெரிகிறது. என் தந்தை ஒரு விவசாயி, ஆனால், எங்கள் கிராமத்தில் எங்களுக்கு நல்ல கல்வி கிடைக்கவில்லை, இதனால் நாங்கள் எனது 10-ம் வகுப்பில் பாட்னாவுக்கு மாறினோம். எனது தந்தை இந்தூருக்கு வெளியே செல்ல வேண்டியிருந்தது. இந்த நிலையை மாற்ற விரும்புகிறேன்”என்றார்.
எம்டெக் கட்டண உயர்வு, கேட் தேர்வு எழுதுவதற்கான அவரது உந்துதலைப் பாதிக்கவில்லை, ஏனெனில் அவரது நோக்கம் ஒரு வேலையைப் பெறுவதாகும் என்று இந்த பொறியாளர் கூறினார்.
அவர் ஏற்கனவே எல் அண்ட் டி நிறுவனத்தில் வளாகத் ஆள்சேர்ப்பு மூலம் இடம்பிடித்துள்ளார். இப்போது நிறுவனங்களுக்கு இடையே தேர்வு செய்ய வேண்டும். “நான் எனது துறையில் பணியாற்ற விரும்புவதால், கேட் தேர்வு செயல்முறை முடிவடையும் வரை காத்திருப்பேன்” என்று அவர் கூறினார். இது அவரது குடும்பத்தினருக்கு ஒரு உணர்ச்சிகரமான தருணம். அவர் ஒரு நல்ல ஊதியம் பெற்றவுடன் ஒன்றிணைக்க முடியும் என்று அவர் நினைக்கிறார்.
அபாஷுடன், அவரது பேட்ச்மேட்களும், சீனியர்களும் கூட தேர்வுக்கு வந்திருந்தனர். இருப்பினும், அவர் அதிக மதிப்பெண் பெற்றவராக வெளிவந்துள்ளார். அவருடைய வளாகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் 24, 50 மற்றும் 19வது இடங்களைப் பெற்றுள்ளனர்.
அபாஷ் ராய் தனது தேர்வு தயாரிப்பு பற்றி கூறுகையில் “நான் கேட் தேர்வில் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்தினேன். நான் சரியாக இரண்டாம் ஆண்டு முதல் ஒரு பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். அது சரியான பாடங்கள் மற்றும் தலைப்புகளில் கவனம் செலுத்த எனக்கு உதவியது. அத்துடன் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கான ஒரு பயன்முறையையும் எனக்குக் கொடுத்தது. வேலை வாய்ப்பு பருவத்தில் நான் ஓய்வு எடுத்தேன். பின்னர், கடந்த 3-4 மாதங்களில் மாதிரி தொடர் தேர்வுகளிளில் கவனம் செலுத்தினேன்.” என்று கூறினார்.
போட்டித் தேர்வின் மூலம் ஒருவருக்கு உதவும் அனைத்து படிப்பும் இதுவல்ல என்று வருங்கால தேர்வு ஆர்வலர்களுக்கு அபாஷ் பரிந்துரை செய்தார். மேலும் அபாஷ் ராய், “லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதும் ஒரு போட்டித் தேர்வை வெல்ல, இந்த ஆண்டுகளில் கவனம் செலுத்துவது முக்கியம். ஓரிரு வருடங்களுக்குப் பிறகு ஒருவர் இடைவெளி எடுக்க முடியாது. ஒரு வழக்கத்தை வைத்திருப்பது முக்கியம்.” என்று கூறினார்.
2020 கேட் தேர்வில் முதலிடம் பெற்ற அபாஷ் ராய் படிப்பிற்கும் கல்லூரி வாழ்க்கையை அனுபவிப்பதற்கு இடையில் ஒரு சமநிலையை மேற்கொண்டதாகக் கூறினார். “நீங்கள் உந்துதல் பெற வேறு விஷயங்கள் இருந்தால் மட்டுமே இதை அடைய முடியும். தேர்வில் வெற்றி பெற நான் அறையில் என்னைப் பூட்டிக் கொள்ளவில்லை. மற்றவர்களுக்கும் நான் பரிந்துரைக்கவில்லை. நான் எனது கல்லூரி வாழ்க்கையையும் அனுபவித்துள்ளேன். அதிக அழுத்தம் மட்டுமே செயல்திறனுடன் தலையிடுகிறது” என்று அபாஷ் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"