இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கான்பூர் (IIT-கான்பூர்) 2023 ஆம் ஆண்டுக்கான பொறியியல் பட்டதாரி திறன் தேர்வுக்கான (GATE) விண்ணப்பப் பதிவுக் காலக்கெடுவை நீட்டித்துள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அக்டோபர் 4 ஆம் தேதி வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
GATE தேர்வுக்கான ஹால் டிக்கெட்கள் ஜனவரி 3, 2023 முதல் வெளியிடப்படும் மற்றும் தேர்வு பிப்ரவரி 4, 5, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். IIT-கான்பூர் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 23 புதிய நகரங்களில் தேர்வு மையங்களை அமைத்துள்ளது.
இதையும் படியுங்கள்: தமிழ்நாடு வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு: 7 மாணவர்கள் 200க்கு 200 பெற்று முதலிடம்
கேட் தேர்வு 2023: தகுதிகள்
எந்தவொரு இளங்கலை பட்டப்படிப்பு திட்டத்திலும் தற்போது மூன்றாம் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளில் படிக்கும் விண்ணப்பதாரர் GATE 2023 க்கு விண்ணப்பிக்கலாம். அல்லது, பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை, அறிவியல், வணிகம் அல்லது கலை உள்ளிட்ட பிரிவுகளில் ஏதேனும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பை விண்ணப்பதாரர் முடித்திருக்க வேண்டும்.
கேட் தேர்வு 2023: தேர்வு முறை
கேட் தேர்வுத் தாள் 100 மதிப்பெண்களுக்கு இருக்கும், ஒரு விண்ணப்பதாரர் இரண்டு தாள்களுக்குத் தோன்றினால் தலா 100 மதிப்பெண்கள் இருக்கும். தாளில் 15 மதிப்பெண்களுக்கு ஜெனரல் ஆப்டிட்யூட் (GA) இருக்கும், இது எல்லா தாள்களுக்கும் பொதுவானதாக இருக்கும். மேலும், அந்தந்த பாடத்திட்டத்தை உள்ளடக்கிய மீதமுள்ள தாளுக்கு 85 மதிப்பெண்கள் ஒதுக்கப்படும்.
தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். மூன்று வகையான கேள்விகள் இருக்கும். அவை கொள்குறி வகை கேள்விகள் (MCQ), பல தேர்வு கேள்விகள் (MSQ) மற்றும் எண் பதில் வகை (NAT). மொத்தம் 65 கேள்விகள் (10 GA + 55 பாடம்) இருக்கும்.
MCQ களில் தவறான பதில்களுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் இருக்கும் மற்றும் MSQ அல்லது NAT இல் தவறான பதில்களுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் இருக்காது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil