GATE 2024: இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (IISc) பெங்களூர், கிராஜுவேட் ஆப்டிட்யூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங் (GATE) 2024க்கான போர்ட்டலைத் தொடங்கியுள்ளது. அறிவிப்பு வெளியானதும், கொடுக்கப்பட்ட பதிவு தேதிகளில் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான gate2024.iisc.ac இல் விண்ணப்பிக்க முடியும். இந்த ஆண்டுக்கான கேட் தேர்வை ஐ.ஐ.எஸ்.சி பெங்களூர் நடத்துகிறது.
பதிவு மற்றும் தேர்வுக்கான தேதிகள் விரைவில் வெளியிடப்படும்.
இதையும் படியுங்கள்: TNEA Counselling: என்ஜினீயரிங் கவுன்சலிங் ரவுண்ட் 1; மாணவர்கள் தேர்வு செய்த டாப் 5 கோர்ஸ்கள் இவை!
விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 29 ஆம் தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 30 தாள்கள் மற்றும் 82 தாள் சேர்க்கைகள் இருக்கும். இந்தத் தேர்வு 200 நகரங்களில் கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறையில் நடத்தப்படும். தேர்வு நகரங்களின் பட்டியலிலிருந்து விண்ணப்பதாரர்கள் மூன்று நகரங்களைத் தேர்வு செய்யலாம், மூன்று தேர்வுகளும் ஒரே மண்டலத்திலிருந்து இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் இரண்டு தாள்கள் வரை எழுத அனுமதிக்கப்படுவார்கள். பெண்கள், எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 29 வரை ரூ. 900 (தாள் ஒன்றுக்கு) மற்றும் செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 13 வரை ரூ. 1,400 (தாள் ஒன்றுக்கு) மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 29 வரை விண்ணப்பக் கட்டணம் ரூ. 1800 ( தாள் ஒன்றுக்கு) மற்றும் செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 13 வரை ரூ 2,300 (தாள் ஒன்றுக்கு).
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil