GATE 2024: இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்.சி) பெங்களூர் இன்று பொறியியல் பட்டதாரி திறன் தேர்வுக்கான (கேட் 2024) போர்ட்டலைத் திறந்துள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான gate2024.iisc.ac.in இல் விண்ணப்பிக்கலாம்.
கேட் தேர்வு பிப்ரவரி 3, 4, 10 மற்றும் 11, 2024 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். தாமதக் கட்டணம் இல்லாமல் பதிவு செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 29 மற்றும் தாமதக் கட்டணத்துடன் பதிவு செய்வதற்கான கடைசி தேதி அக்டோபர் 13 ஆகும். தேர்வர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தில் நவம்பர் 7 முதல் மாற்றங்களைச் செய்யலாம். 11 முதல் ஜனவரி 3 முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்: GATE 2024; கேட் தேர்வு அட்டவணை, மதிப்பெண் முறை என்ன?
கேட் 2024 தேர்வுக்கு பதிவு செய்வது எப்படி?
படி 1: அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்— gate2024.iisc.ac.in
படி 2: முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்
படி 3: புதிய பதிவைக் கிளிக் செய்து உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் பல விவரங்களை உள்ளிடவும்
படி 4: பதிவு செய்தவுடன், உங்கள் பதிவு ஐ.டி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்
படி 5: விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்
படி 6: சேமித்து, சமர்ப்பித்து, கட்டணத்தைச் செலுத்தவும்
படி 7: எதிர்கால குறிப்புக்காக விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்
வழக்கமான காலத்திற்கான விண்ணப்பக் கட்டணம் பொது பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு தாள் ஒன்றுக்கு ரூ.1800 ஆகவும், பெண்கள், எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.900 ஆகவும் உள்ளது, நீட்டிக்கப்பட்ட காலத்திற்கான விண்ணப்பக் கட்டணம் பொது பிரிவினருக்கு தாள் ஒன்றுக்கு ரூ.2300 ஆகவும், பெண்கள், எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1400 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் மார்ச் 16 ஆம் தேதி வெளியிடப்படும் மற்றும் மதிப்பெண் அட்டைகள் மார்ச் 23 முதல் கிடைக்கும். விண்ணப்பதாரர்களின் பதில்கள் பிப்ரவரி 16 முதல் போர்ட்டலில் கிடைக்கும் மற்றும் விடைக்குறிப்புகள் பிப்ரவரி 21 முதல் கிடைக்கும். பிப்ரவரி 22 முதல் 25 வரை விண்ணப்பதாரர்கள் ஆட்சேபனைகளை தெரிவிக்க முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“