IISc பெங்களூர் GATE 2024 ரிசல்ட்: 2024 ஆண்டின் இன்ஜினியரிங் பட்டதாரி திறன் தேர்வு (கேட் 2024) முடிவுகள் மார்ச் 16 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மதிப்பெண் அட்டைகளை மார்ச் 23 முதல் மே 31 வரை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மதிப்பெண்கள் வெளியிடப்பட்டதும் அதிகாரப்பூர்வ இணையதளமான https://gate2024.iisc.ac.in/ என்ற பக்கத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
ஆங்கிலத்தில் படிக்க: GATE 2024 Result: How to use GATE score for financial assistance
கேட் மதிப்பெண்கள் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
பல அரசு நிறுவனங்களால் வழங்கப்படும் பல்வேறு பெல்லோஷிப்களுக்கு விண்ணப்பிக்க GATE தேர்வில் தகுதி என்பது குறைந்தபட்சத் தேவையாகும். GATE தேர்வில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள், கல்வி அமைச்சகம் மற்றும் பிற அரசு நிறுவனங்களால் ஆதரிக்கப்படும் நிறுவனங்களில் பொறியியல், அறிவியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை அல்லது மனிதநேயம் ஆகியவற்றின் தொடர்புடைய கிளைகளில் முதுநிலைப் படிப்புகள் மற்றும் நேரடி முனைவர் பட்டப் படிப்புகளில் சேர்க்கை அல்லது நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
கேட் தேர்வு: நிதி உதவியை எவ்வாறு பெறுவது?
ஒரு முதுகலை திட்டத்திற்கான உதவித்தொகை அல்லது ஊக்கத்தொகை உட்பட நிதி உதவியைப் பெற, தேர்வர் முதலில் மத்திய நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் ஒரு படிப்பில் சேர வேண்டும்.
நிறுவனம் அல்லது நிறுவனத்தின் ஒரு துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிமுறைகளைப் பொறுத்து, GATE தேர்வில் அவர்களின் செயல்திறன் அடிப்படையில்; அல்லது GATE இல் அவர்களின் செயல்திறன் மற்றும் அவர்கள் விண்ணப்பித்த துறையால் நடத்தப்படும் சேர்க்கை தேர்வு அல்லது நேர்காணல் அல்லது தேர்வரின் கல்விப் பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேரடியாக ஒரு படிப்பில் அனுமதிக்கப்படலாம்.
கல்வி அமைச்சகத்தினால் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, கேட் தேர்வின் செயல்திறனுக்கு குறைந்தபட்சம் 70 சதவிகிதம் வெயிட்டேஜ் வழங்கப்படும், மீதமுள்ளவை தேர்வு அல்லது நேர்காணலில் தேர்வரின் செயல்திறன் மற்றும்/அல்லது கல்விப் பதிவின் அடிப்படையில் இருக்கும்.
இருப்பினும், சேர்க்கை நிறுவனங்கள் தேர்வு/நேர்காணலில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணையும் பரிந்துரைக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் சேர்க்கை செயல்முறையின் முழு விவரங்கள் மற்றும் தொடர்புடைய சேர்க்கை நிறுவனங்களில் இருந்து கல்வி அமைச்சகத்தின் உதவித்தொகை அல்லது நிதியுதவி கிடைப்பதை சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகையுடன் GATE மூலம் முதுகலை சேர்க்கைக்கான அளவுகோல்கள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொன்றுக்கு மாறுபடும். முதுநிலை உதவித்தொகை அல்லது ஊக்கத்தொகையின் அளவும் சேர்க்கை நிறுவனத்தின் பொறுப்பாகும். பல்வேறு பிரிவுகளுக்கான இட ஒதுக்கீடு, சேர்க்கை நிறுவனம் மற்றும் இந்திய அரசு விதிகளின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளின்படி இருக்கும்.
சேர்க்கை உறுதி செய்யப்பட்டால், நிதி உதவி அல்லது உதவித்தொகை வழங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையையும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் குறிப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“