Advertisment

GATE Results 2024: கேட் மதிப்பெண் மூலம் வேலை; எந்தெந்த பொதுத் துறை நிறுவனங்களில் வாய்ப்பு?

GATE Results 2024: கேட் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு வேலை வாய்ப்பு வழங்கும் பொதுத் துறை நிறுவனங்கள்; முழுப் பட்டியல் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
JEE Main 2019 Answer Key: ஜேஇஇ மெயின் தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

GATE Results 2024

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

GATE Results 2024: பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL), பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) மற்றும் கோல் இந்தியா லிமிடெட் (CIL) உள்ளிட்ட பல பொதுத் துறை நிறுவனங்கள், கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங் (கேட்) 2024 முடிவுகளைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்களை ஆட்சேர்ப்புச் செய்யும். கேட் 2024 தேர்வு முடிவுகள் மார்ச் 16, சனிக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: GATE 2024 Results (OUT): Check list of PSUs hiring through GATE score

GATE 2024 தேர்வு முடிவுகளில், கட்டிடக்கலை, சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆகியவற்றுக்கான தாள்களின் முடிவுகள் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) ஆட்சேர்ப்புக்கு பயன்படுத்தப்படும், சிவில், கெமிக்கல், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் தொடர்பான தாள்கள், இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் (EIL) நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு செய்ய பயன்படுத்தப்படும்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) கெமிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் மெட்டலர்ஜிக்கல் இன்ஜினியரிங் ஆகியவற்றில் கேட் 2024 இன் முடிவுகளைப் பயன்படுத்தும்.

கேட் 2024 தேர்வு எழுதுபவர்கள் என்.எம்.டி.சி லிமிடெட் நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் டிரெய்னி (டெக்) பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று நேஷனல் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (என்.எம்.டி.சி) லிமிடெட் அறிவித்துள்ளது.

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (என்.பி.சி.ஐ.எல்) கெமிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் மெக்கானிக்கல் ஆகிய ஆறு பொறியியல் பிரிவுகளில் 2024 தொகுதி நிர்வாகப் பயிற்சியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு கேட் 2024 மதிப்பெண்ணைப் பயன்படுத்தும்.

கேட் முடிவு 2024: மதிப்பெண்களை ஏற்கும் பிற பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியல்

- பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL)
– பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL)
– கோல் இந்தியா லிமிடெட் (CIL)
– ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் (CRIS)
– செனாப் வேலி பவர் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் (CVPPL)
– தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் (DVC)
– எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL)
– கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (GAIL)
– மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (MDSL)
– நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (NALCO)
– இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI)
– என்.எல்.சி இந்தியா லிமிடெட் (NLCIL)
– தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (NMDC)
– நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL)
- தேசிய அனல் மின் கழகம் (NTPC)
- எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC)
– பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (PGCIL)
– பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (POSOCO)
– ராஷ்ட்ரிய இஸ்பத் நிகாம் லிமிடெட் (RINL)

கேபினட் செயலகத்தில் உள்ள மூத்த கள அதிகாரி (தொலைக்காட்சி), மூத்த ஆராய்ச்சி அதிகாரி (கிரிப்டோ) மற்றும் மூத்த ஆராய்ச்சி அதிகாரி (S&T) உள்ளிட்ட மத்திய அரசின் குரூப்-ஏ நிலைப் பணிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பும் கேட் மதிப்பெண் அடிப்படையில் செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

gate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment