இந்திய தொழில்நுட்பக் கழகம், கான்பூர் (ஐ.ஐ.டி கான்பூர்) இன்று (ஜனவரி 3) பொறியியல் பட்டதாரி திறன் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை இன்று வெளியிடப்பட இருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
GATE 2023 தேர்வுகள் பிப்ரவரி 4, 2023 அன்று தொடங்கி பிப்ரவரி 5, 11 மற்றும் 12, 2o23 ஆகிய தேதிகளில் நடைபெறும். விண்ணப்பதாரர்களின் பதில்கள் பிப்ரவரி 15, 2023 அன்று விண்ணப்ப போர்ட்டலில் கிடைக்கும். தற்காலிக விடைக்குறிப்பு பிப்ரவரி 21, 2023 அன்று கிடைக்கும் மற்றும் விடைக்குறிப்புக்கான சவால்களை பிப்ரவரி 22 முதல் 25, 2023 வரை சமர்ப்பிக்கலாம். மார்ச் 16, 2023 முடிவுகள் அறிவிக்கப்படும் மற்றும் ஸ்கோர்கார்டு மார்ச் 21, 2023 அன்று பதிவிறக்கம் செய்யலாம்.
இதையும் படியுங்கள்: UPSC Exam: பாஸ்போர்ட் அடிப்படை உரிமை ஏன், சிறுதானியம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி… முக்கிய டாபிக்ஸ் இங்கே!
தேசிய அளவிலான கேட் தேர்வு பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை, அறிவியல், வணிகம் மற்றும் கலைகளில் பல்வேறு இளங்கலை பாடங்களின் விரிவான புரிதலை சோதிக்கிறது. கேட் ஆண்டுதோறும் ஏழு ஐ.ஐ.டி.,கள் (பம்பாய், டெல்லி, கான்பூர், குவஹாத்தி, ரூர்க்கி, மெட்ராஸ் மற்றும் காரக்பூர்) மற்றும் ஐஐஎஸ்சி பெங்களூர் தேசிய ஒருங்கிணைப்பு வாரியத்தின் சார்பாக சுழற்சி அடிப்படையில் நடத்தப்படுகிறது.
GATE 2023 தேர்வு 29 தாள்களுக்கு நடத்தப்படும் மற்றும் விண்ணப்பதாரர்கள் இரண்டு தாள்களை எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
GATE 2023 தேர்வு தேதி மற்றும் நடைபெறும் நேரம்
கேட் தேர்வு பிப்ரவரி 4, 5, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறும். ஒவ்வொரு தேர்வு நாளிலும் இரண்டு ஷிப்ட்களில் தேர்வு நடைபெறும். காலை ஷிப்ட் காலை 9:30 முதல் மதியம் 12:30 வரை நடத்தப்படும் மற்றும் பிற்பகல் ஷிப்ட் மதியம் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும்.
கேட் தேர்வு 2023 ஹால்டிக்கெட்: பதிவிறக்கம் செய்வது எப்படி
படி 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் - https://gate.iitk.ac.in/
படி 2: அனுமதி அட்டை இணைப்பைக் கிளிக் செய்யவும்
படி 3: உள்நுழைவு சான்றுகளை உள்ளிடவும்
படி 4: ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுக்கவும்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil