இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான தி ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்ரேசன் ஆஃப் இந்தியாவில் (GIC) உதவி மேலாளர்/ அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 100 காலிப் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.12.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
OFFICERS
காலியிடங்களின் எண்ணிக்கை: 110
GENERAL – 18
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
LEGAL – 9
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor’s degree in law பெற்றிருக்க வேண்டும்.
HR – 6
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் Post Graduation in HRM / Personnel Management படித்திருக்க வேண்டும்.
ENGINEERING – 5
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor’s degree (B.E/B.Tech) in Civil / Aeronautical / Marine / Mechanical / Electrical பெற்றிருக்க வேண்டும்.
IT – 22
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E/B.Tech in computer science/information technology/Electronics & Electrical/Electronics & Telecommunications/ Electronics & Communication பெற்றிருக்க வேண்டும்.
ACTUARY – 10
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
INSURANCE – 20
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
MEDICAL (MBBS) – 2
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS படித்திருக்க வேண்டும்.
FINANCE – 18
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Com படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.11.2024 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.
சம்பளம்: 45,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://www.gicre.in/en/people-resources/career-en என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.12.2024
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.1000. எஸ்.சி, எஸ்.டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.gicre.in/images/2024/Detailed_Advertisement_for_Recruitment_of_AMs_in_GIC_Re_2024_-_v3_-_Final.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.