/indian-express-tamil/media/media_files/2025/09/16/aadu-2025-09-16-18-36-43.jpg)
ஆடு, மாடு, நாட்டுக் கோழி வளர்ப்பு பயிற்சி: திருச்சி கால்நடை மருத்துவ பல்கலை. அழைப்பு
ஆடு, மாடு, நாட்டுக் கோழி வளர்ப்பு பயிற்சி குறித்து திருச்சி கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கட்டண பயிற்சி விவரங்கள்:
திருச்சிராப்பள்ளி கொட்டப்பட்டு கோழி பண்ணை சாலையில் செயல்பட்டு வரும் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் கட்டண பயிற்சி விவரங்கள் கீழ் வருமாறு
1    ஆடு வளர்ப்பு பயிற்சி  -    22.09.2025
2    நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி    - 25.09.2025
3    கறவை மாடு வளர்ப்பு பயிற்சி -    26.09.2025
விருப்பமுள்ள வேளாண் பெருமக்கள் பயிற்சியில் பங்கு பெற ரூபாய் 590/- மட்டும் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதலில் பதிவு செய்பவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் முதல் 20 நபர்கள் மட்டுமே பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
மேலும் தகவல்களுக்கு 0431 - 2331715 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.  பயிற்சியின்  சிறப்பம்சங்கள்
பயிற்சி சான்றிதழ், பயிற்சி கையேடு, மதிய உணவு மற்றும் பல்வேறு துறை வல்லுநர்களுடனான கலந்துரையாடல்களும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us