Google recruitment 2022 for software engineers apply soon: கூகுள் நிறுவனத்தில் மென்பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. பொறியியல் படித்த பெரும்பாலானோரின் கனவு கூகுள் நிறுவனத்தில் வேலை பார்ப்பது. அத்தகைய கனவை நனவாக்க அரிய வாய்ப்பு. உடனே அப்ளை பண்ணுங்க.
இணையத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் கூகுள் என்பது என்ன என தெரியும். அத்தகைய மிகவும் பிரபலமான, உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்தில் மென்பொறியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பொறியியல் படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்கள் இந்தியாவில் உள்ள கூகுள் அலுவலகங்களில் நிரப்பப்பட உள்ளன.
பதவி : மென்பொறியாளர் (Software Engineer)
கல்வித் தகுதி : 2019/2020/2021 ஆகிய ஆண்டுகளில் B.E/B.Tech/M.E/M.Tech முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பணியிடம்: ஹைதராபாத் மற்றும் பெங்களூரு
அனுபவம் : 0-1 வருடங்கள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
இதையும் படியுங்கள்: தமிழ்நாடு அரசு வேலை; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
பொறியியல் டிகிரிகளில் சாப்ட்வேர் படிப்புகளில் திறன் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். C, C++, JAVA, Linux, Python, OS, Machine Learning போன்ற சாப்ட்வேர் விவரங்கள் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://careers.google.com/jobs/results/132239628489892550-software-engineer-university-graduate-2022-start/ என்ற இணையதளப் பக்கம் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil