அரசு துறையில் இவ்வளவு வேலைகள் கொட்டி கிடக்கின்றன!

விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணபித்து பயன் பெறலாம்.

By: Updated: January 26, 2019, 11:30:24 AM

படிப்பை முடித்த பலருக்கும் அரசு துறையில் வேலைவாய்ப்பு என்பது கனவாக இருக்கும். இந்த கனவை நனவாக்க இதோ உங்களுக்கான சிறப்பான வாய்ப்பு. விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணபித்து பயன் பெறலாம்.

1. ரயில்வேயில் வேலை: ஆர்ஆர்பி ஜேஇ வேலை வாய்ப்பு 2019.
காலியிடங்கள்: 1, 847
விண்ணப்பிக்க கடைசி நாள்- ஜனவரி 31

ரயில்வே துறையில் வேலை வாய்ப்பாக்கான (RRB) அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூனியர் பொறியாளருக்கு 13, 847 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க 10 நாட்கள் மட்டுமே உள்ளன.

இதற்கு விண்ணப்பதாரர்கள் 2 வகையாக தேர்வுகளை எழுத வேண்டும். முதல் கட்டம் கணினி அடிப்படையிலான டெஸ்ட் (CBT), இரண்டாம் நிலை CBT, மற்றும் ஆவணம் சரிபார்ப்பு / மருத்துவ பரிசோதனை பொருந்தும். CBT களின் அடிப்படையில், தகுதிக்கு ஏற்ப தேர்வு செய்யப்படும்.

2. இந்திய ரிசர்வ் வங்கி:

விண்ணப்பிக்க கடைசி நாள்- ஜனவரி 30

இந்திய ரிசர்வ் வங்கியில் ஜூனியர் பொறியாளர் சிவில் மற்றும் எலக்ட்ரிக் பொறியாளர்கள் பதவிக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. தகுதியானார்கள் ஜனவரி 30 ஆம் தேதிக்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

3. தேசிய பாதுகாப்பு அகாடமி: யுபிஎஸ்சி என்டிஏ 2019
விண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்ரவரி 4

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.upsc.gov.in வலைத்தளத்திற்கு சென்று விண்ணபிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி பிப்ரவரி 4 .

5. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா:
விண்ணப்பிக்க கடைசி நாள் – பிப்ரவரி 11

ஜனவரி 22 முதல் பிப்ரவரி 11, 2019 வரை விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன்

மொத்த 15 காலியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் எஸ்பிஐ அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணபிக்கலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Gov jobs rrb upsc ssc iocl major recruitment%e2%80%89apply for vacancies this week

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X