scorecardresearch

அரசு கலை- அறிவியல் கல்லூரி அட்மிஷன் தரவரிசை வெளியீடு: 14,066 பேர் விண்ணப்பம்

இந்த ஆண்டு மூன்று லட்சத்து 14 ஆயிரத்து 66 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர்.

tn college admission

தமிழகத்தில், அரசு கலை, அறிவியல் பட்ட படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்தாண்டை (2022ஆம் ஆண்டு) விட, இந்தாண்டு குறைவான மாணவ, மாணவிகளே விண்ணப்பித்தனர்.

கடந்தாண்டு நான்கு லட்சத்து 11 ஆயிரத்து 679 பேர் விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு மூன்று லட்சத்து 14 ஆயிரத்து 66 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர்.

இதனிடையே, அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் தரவரிசை பட்டியல் இன்று அனுப்பி வைக்கப்பட உள்ளது. விண்ணப்பித்த மாணவர்கள், இணையதளம் மூலமாகவும் தங்களது தரவரிசையை உறுதி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Government arts science courses rank list publication