இந்த வாரம் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்:
எக்சிம் வங்கி ஆட்சேர்ப்பு 2020: ஏற்றுமதி சந்தையில் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு உதவி செய்திடும் வகையில் எக்சிம் வங்கி செயல்பட்டு வருகிறது. எக்சிம் வங்கியில் உள்ள பல்வேறு துறைகளில் மேலாண்மை பயிற்சியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்த காலியிடங்கள் – 60. விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 31. விபரங்களுக்கு eximbankindia.in என்ற இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதத்திற்கு ரூ .40,000 ஊதியம் கிடைக்கும்.
ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு 2021: ராணுவத்தில் பல்வேறு பதவிக்களுக்கு ஆட்கள் சேர்ப்பதற்கான முகாம் தெலங்கானா மாநிலம் செக்கந்திராபாத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி முதல் பிப்ரவரி 28ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. தொழில் நுட்ப வீர ர்(ஏஇ), பொதுப் பணிக்கான வீரர், டிரேட்ஸ் மேன் வீர ர், சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரர்கள் (பொதுப்பிரிவு) ஆகிய பிரிவுகளில் ஆட்தேர்வு நடைபெற உள்ளது
கூடுதல் விவரங்களை http://www.joinindianarmy.nic.in என்ற இந்த வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
சென்னையில் வேலை வாய்ப்பு முகாம்: பட்டியலினம் மற்றும் பழங்குடியினவர்களுக்கான தேசிய தொழிற்பயிற்சி மையம், சென்னையில் வரும் 18-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது.
பிபிஓ, வங்கி, காப்பீடு, மின் வர்த்தகம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், விளம்பரத்துறை, வேகமாக விற்பனையாகக் கூடிய நுகர்வோர் பொருட்கள் (எஃப்எம்சிஜி), மனிதவள மேம்பாடு, சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை உள்ளிட்ட துறைகள் சார்ந்த தனியார் நிறுவனங்களில் புதியவர்களுக்கும், அனுபவமிக்கவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் உள்ளன. மாதம் ரூ. 10,000 முதல் ரூ. 30,000 வரை ஊதியம் கிடைக்கும்.
மேலும், விவரங்களுக்கு
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐ.ஓ.சி.எல்) தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத தொழிற்பழகுநர் பயிற்சிக்காக (அப்ரண்டிஸ்) விண்ணப்பங்களை வரவேற்க்கின்றது. ஆர்வமுள்ளவர்கள் iocl.com என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிந்து விண்ணபிக்கலாம். மொத்த காலியிடங்கள் – 436. டிசம்பர் 19ம் தேதி வரை தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
யுபிஎஸ்சி புள்ளியியல் அலுவலர் ஆட்சேர்ப்பு : புள்ளியியல் அலுவலர், கண்காணிப்பாளர் (அச்சிடுதல்) ஆகிய பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புள்ளியியல் அலுவலர் பணிக்கு 35 காலியிடங்களுக்கும், கண்காணிப்பாளர் பணிக்கு 1 காலியிடங்களும் உள்ளன.
ஆர்வமும், விருப்பமும் உள்ள தேர்வர்கள் டிசம்பர் 17 அல்லது அதற்கு முன்னர் upc.gov.in அல்லது upsconline.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மத்திய தொழிலக பாதுகாப்புப் படை: மத்திய தொழிலக பாதுகாப்புப் படை ஏசி–க்கான (Assistant Commandants (Executive) ஆட்சேர்ப்பு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்ப செயல்முறை டிசம்பர் 22ம் தேதியோடு முடிவடைகிறது. விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம், உயர்க் கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கனரா வங்கி ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி ஆட்சேர்ப்பு : கனரா வங்கி காலியாக உள்ள 220 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுடைய தேர்வர்களிடம் இருந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப செயல்முறை இன்றுடன் (டிசம்பர் 15ம்) தேதியோடு முடிவடைகிறது. மேலும், விவரங்களுக்கு canarabank.com என்ற வலைத்தளத்தை அணுகவும்.
தேர்வு முடிவுகள் வெளியீடு: இதற்கிடையே, மத்திய தேர்வாணையம் (யுபிஎஸ்சி) , 2020 அக்டோபர் 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் நடத்திய ஒருங்கிணைந்த புவி அறிவியலாளர் (முதன்மை) தேர்வு 2020க்கான முடிவுகளையும், 2020 அக்டோபர் 18ம் தேதி நடத்திய பொறியியல் சேவைகள் (முதன்மை) தேர்வு முடிவுகளையும் வெளியிட்டது.