மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனத்திற்கு.. நீட் தேர்வில் கட் ஆஃப் மதிப்பெண் மாற்றம்!

எஸ்.சி/எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவில் 34 சதவீத மதிப்பெண் பெற வேண்டும்

By: Updated: May 8, 2019, 04:05:16 PM

Neet cut off : 2019-20 மருத்துவ உயர்படிப்புக்கான நீட் தேர்வின் தகுதி மதிப்பெண்களை 6 சதவிகிதம் குறைக்க சுகாதார அமைச்சகம், இந்திய மருத்துவ கவுன்சிலின் முன்வந்துள்ளது.

மருத்துவத்துறை பட்டப்படிப்பு மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் சேர தற்போது நீட் தேர்வு என்னும் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மருத்துவம் படிக்க நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்நிலையில் இந்திய மருத்துவ கவுன்சில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் பட்டமேற்படிப்பில் சேர கட் ஆஃப் மதிப்பெண்களை குறைப்பது குறித்து அண்மையில் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின் முடிவில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி 2019-20 கல்வி ஆண்டுக்கான உயர்படிப்புக்கான நீட் தேர்வின் தகுதி மதிப்பெண்களை 6 சதவிகிதம் குறைக்க முன்வந்துள்ளது.

2019-20 கல்வியாண்டில் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு தகுதியினைப் பெற பொதுப் பிரிவினர் குறைந்த பட்சம் 44 சதவிகிதம் மதிப்பெண்ணினை பெற வேண்டும், மாற்றத்திறனாளிகள் 39 சதவீதம் மதிப்பெண் பெறவேண்டும். எஸ்.சி/எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவில் 34 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவை திருத்தப்பட்ட தகுதி மதிப்பெண்கள் படி மாணவர்களை அனுமதிக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய கோரியுள்ளது

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Govt approves lowering of neet pg cut offs by 6 percentile for 19

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X