Advertisment

மத்திய வாரியம் விட மாநில வாரியத்தில் படிக்கும் மாணவர்கள் அதிக தோல்வி: பல்வேறு கேள்விகளை எழுப்பும் அரசு ஆய்வு

2023 ஆம் ஆண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வு, மத்திய வாரியங்களுடன் ஒப்பிடும்போது மாநில வாரியங்களில் அதிக தோல்வி விகிதத்தைக் காட்டுகிறது.

author-image
WebDesk
New Update
state board students fail

Govt study shows this state has almost 80% of its students choosing science stream in Class 12

ஆந்திரப் பிரதேசம், மணிப்பூர், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா மாநில பள்ளி வாரியங்களில் 2023 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களில் 65% க்கும் அதிகமானோர் அறிவியல் பாடப் பிரிவில் உள்ளனர், அதேநேரம் மேகாலயா, திரிபுரா, மேற்கு வங்கம் மற்றும் நாகாலாந்து மாநில வாரியங்களில் 12 ஆம் வகுப்பு மாணவர்களில் 75% க்கும் அதிகமானோர் கலைப் பிரிவில் உள்ளதாக மத்திய அரசின் தரவு காட்டுகிறது.

Advertisment

இதில், ஆந்திரப் பிரதேசத்தின் இடைநிலைக் கல்வி வாரியம், 12ஆம் வகுப்பு மாணவர்களில் அறிவியல் பாடத்தில் (78%) அதிக சதவீதத்தைப் பெற்றுள்ளது. மேகாலயா பள்ளிக் கல்வி வாரியம் மிகக் குறைவாக (11.4%) இருந்தது.

மேகாலயா மாநில வாரியத்தில், 12 ஆம் வகுப்பு மாணவர்களில் 81.1% பேர் கலைப் பிரிவில் இருந்தனர். திரிபுரா இடைநிலைக் கல்வி வாரியம் கலைப் பிரிவில் 84.6% மாணவர்களைக் கொண்டிருந்தது, மேற்கு வங்க உயர்நிலைக் கல்வி கவுன்சில் 12 ஆம் வகுப்பு மாணவர்களில் 78.4% பேர் கலைப் பிரிவில் உள்ளனர்.

2023 ஆம் ஆண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வு, மத்திய வாரியங்களுடன் ஒப்பிடும்போது மாநில வாரியங்களில் அதிக தோல்வி விகிதத்தைக் காட்டுகிறது.

மாநில மற்றும் மத்திய வாரியங்களில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 1.55 கோடி மாணவர்களில் 27.2 லட்சம் மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.

மாநில வாரியங்களில், 12ஆம் வகுப்புத் தேர்வில் சுமார் 1.37 கோடி மாணவர்கள் தேர்வெழுதினர், அதில் சுமார் 25 லட்சம் மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தனர் (தோல்வி விகிதம் சுமார் 18%).

இதற்கு நேர்மாறாக, மத்திய வாரியங்களில் சுமார் 17.6 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர், சுமார் 2.1 லட்சம் மாணவர்கள் அதில் தோல்வியடைந்துள்ளனர் (தோல்வி விகிதம் சுமார் 12%).

12 ஆம் வகுப்பில் தோல்வியுற்ற 27.2 லட்சம் மாணவர்களில் 53% அல்லது சுமார் 14.4 லட்சம் மாணவர்கள் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநில வாரியங்கள் மற்றும் மத்திய வாரியங்களைச் சேர்ந்தவர்கள் என்று அரசாங்கத்தின் பகுப்பாய்வு காட்டுகிறது.

2023 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை உத்தரப் பிரதேச மாநில வாரியத்தில் தான் அதிகம் (சுமார் 5.92 லட்சம் மாணவர்கள்),

அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் (சுமார் 3.35 லட்சம் மாணவர்கள்), மத்திய வாரியங்கள் (2.13 லட்சம் மாணவர்கள்), குஜராத் (1.62 லட்சம் மாணவர்கள்), மகாராஷ்டிரா (1.37 லட்சம் மாணவர்கள்) உள்ளது.

பெரும்பாலான மாநிலங்களில், 2023 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட அதிகமாக இருந்தது. மொத்தம் 28 மாநில வாரியங்களில் 21 மற்றும் மத்திய வாரியங்களில் 2022 ஆம் ஆண்டை விட 2023 இல் 12 ஆம் வகுப்பில் அதிக மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.

இதற்கிடையில், 10 ஆம் வகுப்பில், மாநில மற்றும் மத்திய வாரியங்களில் மொத்தம் சுமார் 1.85 கோடி மாணவர்கள் தேர்வெழுதினர், அவர்களில் சுமார் 28 லட்சம் மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். மத்திய வாரியங்களில் 24 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர், அவர்களில் 1.5 லட்சம் பேர் தோல்வியடைந்தனர் (தோல்வி விகிதம் 6%),

மாநில வாரியங்களில் அதைவிட அதிகமாக 1.61 கோடி மாணவர்கள் தேர்வெழுதினர், அவர்களில் 26.5 லட்சம் பேர் தோல்வியடைந்துள்ளனர் ( தோல்வி விகிதம் 16%)

சுமார் 28 லட்சம் மாணவர்கள் 10ஆம் வகுப்பில் தோல்வியுற்ற நிலையில், 5.5 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதவில்லை. 10ஆம் வகுப்பு படித்த சுமார் 33.5 லட்சம் மாணவர்கள் 11ஆம் வகுப்பை எட்டவில்லை. இது உயர்நிலை மட்டத்தில் குறைந்த தக்கவைப்பு விகிதம் மற்றும் மொத்த சேர்க்கை விகிதத்தை சுட்டிக்காட்டுகிறது, என்று அமைச்சகத்தின் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

2023 ஆம் ஆண்டில் 10 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த சுமார் 28 லட்சம் மாணவர்களில், ஆந்திரப் பிரதேச மாநில வாரியத்தில் (2.55 லட்சம் மாணவர்கள்) அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

அதைத் தொடர்ந்து கர்நாடகா (1.96 லட்சம் மாணவர்கள்), மத்திய வாரியங்கள் (1.51 லட்சம் மாணவர்கள்), மகாராஷ்டிரா (1.06) லட்சம் மாணவர்கள்), மற்றும் ஹரியானா (95,560 மாணவர்கள்) இருந்தது.

நாட்டில் உள்ள பள்ளி வாரியங்களில் உள்ள வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு, NCERTயின் கீழ் தரநிலை அமைக்கும் அமைப்பான PARAKH, சமீபத்தில் கல்வி அமைச்சகத்திடம் ஒரு 'சமநிலை' அறிக்கையை சமர்ப்பித்துள்ளது, இது தேசிய கல்விக் கொள்கை, 2020 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நாட்டில் உள்ள பல்வேறு பள்ளி வாரியங்களில் சமத்துவத்தை எவ்வாறு அடையலாம் என்பது குறித்த பரிந்துரைகளை வழங்குகிறது.

இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் பள்ளி நிர்வாகங்களுடன் விவாதிக்கப்படுகின்றன.

2023 ஆம் ஆண்டு தேர்வு முடிவுகளின் அரசாங்கத்தின் பகுப்பாய்வு, 12 ஆம் வகுப்பில் (51%) மாணவர்களுடன் ஒப்பிடும்போது (49%) மாணவிகளிடையே. தேர்ச்சி சதவீதம் அதிகமாக இருப்பதைக் காட்டுகிறது.

மாணவர்களை விட அதிகமான மாணவிகள் கலைப் பிரிவில் உள்ளனர் (21.12 லட்சம் ஆண்களுக்கு எதிராக 28.3 லட்சம் பெண்கள்). 2022ல் 23.3 லட்சமாக இருந்த அறிவியல் பிரிவில் மாணவிகள் எண்ணிக்கை 2023ல் 25.04 லட்சம் ஆக அதிகரித்துள்ளது.

Read in English: Govt study shows this state has almost 80% of its students choosing science stream in Class 12

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Education
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment