இந்த வாரம் அப்ளை செய்ய வேண்டிய தமிழக அரசு வேலைகள்!

மொத்தம் 12 காலியிடத்தில் பொதுப்பிரிவினருக்கு - 04, பி.சி - 03, எம்.பி.சி - 03, எஸ்.சி - 02, என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த வாரம் இரண்டு வேலைவாய்ப்புகளுக்கு அப்ளை செய்ய கடைசி தேதி உள்ளது. ஒன்று டி.என்.பி.எஸ்.சி-யின் கெமிஸ்ட், மற்றொன்று டி.என்.ஆர்.டி-யின் ஆஃபிஸ் அசிஸ்டெண்ட்ஸ்.

TNPSC recruitment 2019 – தமிழக அரசில் கெமிஸ்ட் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 7-ம் தேதியிலிருந்து இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி 06.03.2019.

கெமிஸ்ட் – 01, ஜூனியர் கெமிஸ்ட் – 01 என மொத்தம் இரண்டு காலியிடங்கள் இதில் உள்ளது.

M.Sc கெமிஸ்ட்ரி, கெமிக்கல் டெக்னாலஜி என கெமிக்கல் சார்ந்த படிப்புகளைப் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

எழுத்துத் தேர்வு, தனி நேர்க்காணல், சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு பணியமர்த்தப்படுவார்கள்.

இதனைப் பற்றி விரிவாக அறிந்துக் கொள்ள www.tnpsc.gov.in தளத்தை விசிட் செய்யவும்.

TNRD recruitment 2019 – ரூரல் டெவலப்மெண்ட் மற்றும் பஞ்சாயத்து ராஜில் 12 ஆஃபிஸ் அசிஸ்டெண்டுகளுக்கான காலியிடங்கள் உள்ளன. கடந்த 21.02.2019 தேதி முதல் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி, 08.03.2019.

மொத்தம் 12 காலியிடத்தில் பொதுப்பிரிவினருக்கு – 04, பி.சி – 03, எம்.பி.சி – 03, எஸ்.சி – 02, என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ரூ.15,700-லிருந்து 50,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும்.

மேலும் தகவல்களுக்கு www.tnrd.gov.in தளத்தை அணுகவும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Education-jobs news in Tamil.

×Close
×Close