அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காகவும், ஆராய்ச்சி சூழலை மேம்படுத்துவதற்காகவும் 8 இந்திய தொழில்நுட்பக் கழகம் (IITs) மற்றும் IISc பெங்களூரில் ஆராய்ச்சிப் பூங்காக்களை நிறுவுவதற்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.
ஐ.ஐ.எஸ்.சி பெங்களூர் தவிர, ஐ.ஐ.டி மெட்ராஸ், ஐ.ஐ.டி பாம்பே, ஐ.ஐ.டி கரக்பூர், ஐ.ஐ.டி கான்பூர், ஐ.ஐ.டி டெல்லி, ஐ.ஐ.டி கவுகாத்தி, ஐ.ஐ.டி ஹைதராபாத், ஐ.ஐ.டி காந்திநகர் ஆகிய இடங்களில் ஆராய்ச்சி பூங்காக்கள் நிறுவப்படும்.
இதையும் படியுங்கள்: JAM 2024; விண்ணப்பப் பதிவு எப்போது? ஐ.ஐ.டி மெட்ராஸ் அறிவிப்பு
ஐ.ஐ.டி மெட்ராஸ், ஐ.ஐ.டி காரக்பூர் மற்றும் ஐ.ஐ.டி டெல்லியில் உள்ள இந்த ஆராய்ச்சி பூங்காக்கள் செயல்படுகின்றன, மற்ற இடங்களில் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன என்று அரசாங்கம் கூறியது.
"இந்த ஆராய்ச்சிப் பூங்காவின் முக்கிய நோக்கங்கள், சிறந்த தரம் வாய்ந்த தொழில்களுடன் ஆராய்ச்சி ஒத்துழைப்பைக் கொண்டிருப்பது, மாணவர்களின் தொழில்முனைவு மற்றும் மேம்பாடு மற்றும் அதற்கான வலுவான கல்வித் தொடர்பை உருவாக்குதல், தொழில்துறைக்கு கல்வி உள்ளடக்கத்தை விரிவாக்குதல் மற்றும் நெருங்கிய ஒத்துழைப்புகள் மூலம் கல்வித் திட்டத்திற்கு மதிப்பு சேர்க்க தொழில்துறைக்கு உதவுதல் போன்றவையாகும். ஆராய்ச்சி பூங்காக்களின் பல்வேறு நோக்கங்களை அடைய, இவை பொதுவாக நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களில் நிறுவப்படுகின்றன,” என்று PIB வெளியீடு கூறியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil