குரூப் 1 மற்றும் 2 உளிட்ட 15 தேர்வுகளுக்கான முடிவுகள் பிப்ரவரி மாதத்திற்குள் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
2023ம் ஆண்டு நடத்தப்பட்ட டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 மற்றும் 2 தேர்வுகளுக்கான முடிவுகள் பல மாதங்கள் கடந்தும் வெளியாகவில்லை. இந்நிலையில் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதத்திற்குள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதேபோன்று, 1,777 பணியிடங்களுக்கான நடத்தப்பட்ட குரூப்2 , குரூப்2ஏ தேர்வு முடிவுகள் வரும் 12ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் 11 மாவட்டக் கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு முடிவுகளும் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும். கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற, உதவி வனக்காவலர் பணிக்கான தேர்வு முடிவுகளும், மாவட்ட உரிமையியல் நீதிபதி பணியில் 245 பேரை நியமனம் செய்வதற்கான முதன்மைத் தேர்விற்கான முடிவுகளும் இம்மாதம் வெளியிடப்படும்.
பல்வேறு அரசுத் துறையில் காலியாக இருந்த பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட 15 தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான கால அட்டவணையையும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“