டி.என்..பி.எஸ்.சி சார்பில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படியே ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பங்களை அனுப்பப்பட வேண்டும். டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பம் பதிவு செய்வதற்கான கடைசி நாள் 28.02. 2024, இரவு 11.59 வரை விண்ணபிக்கலாம்.
விண்ணப்பம் சரிபார்த்தல் நாள் 04.03.2024, அதிகாலை 12.01 மணியிலிருந்து 06.03.2024 இரவு 11.59 வரை சரி பார்க்கலாம்.
தேர்வுக்கான நாள் 9.06.2024 என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.
இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தமிழக வனத்துறை உட்பட்ட வன பாதுகாவலர், ஓட்டுநர் உரிமம் பெற்ற வன பாதுகாவலர், வன கண்காணிப்பாளர் போன்ற பல பதவிகளுக்கு விண்ணபிக்க முடியும். தற்போது 6,244 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“