தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர், டைப்பிஸ்ட், பீல்டு சர்வேயர் உள்ளிட்ட 6.491 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு, செப்டம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
அதற்கு முன்பாக தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு அரசு சார்பில் ஊக்குவிப்பு முகாம் நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது . இதில், தேர்வர்கள் விருப்பமுடன் கலந்து கொண்டனர். மேலும், நேற்று போட்டித் தேர்வு பயிற்சி மையம் சார்பில் குரூப் - 4-க்கான தேர்வு வினத்தாள் மாதிரி கையேடும் நேற்று வெளியப்பட்டது. இதில் தேர்வர்களுக்கு தேவையான முக்கிய 540 மாதிரி கேள்விகளும் , கடந்த வருட போட்டி வினாத் தாள்களும் இடம் பெற்றுள்ளன .
இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசிய தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தேர்வர்களுக்கு ஒரு குட்டிக் கதையை சொல்லி டிஎன்பிஎஸ் குரூப்- 4 ஒரு நாள் முகாமை அமர்க்களப்படுத்தினர் .
கதை இவ்வாறாக செல்கிறது !
ரோட்டில் ஒரு மனிதன் பழைய நாணயத்தை எடுக்கின்றான். அது ஒரு அதிஸ்ர்டமான காசு, இது தான் வாழ்வையே மற்றும் என்று நம்புகிறான். அதை யாருடம் சொல்லாமல், தன் சட்டையில் ஒரு கவரில் வைத்து தினமும் தொட்டு பார்த்துக் கொள்வான். வெளியில் கூட எடுக்க மாட்டார். இந்த நாணயம் வந்தவுடன் உமையிலே அவனது வாழ்வும்,வாழ்க்கை முறையும் மாறியது. பணம், புகழ், நிம்மதி என்று எல்லாம் கிடைத்தது. பல ஆண்டுகள் கழித்து அந்த நாணயத்தைப் பார்க்க அவன் விரும்பினான். கவரில் இருந்து எடுத்தும் பார்த்தான். அப்போது தான் தெரிந்தது இது அவர் சாலையில் எடுத்த நாணயம் இல்லை என்றும், மனைவியின் சிறு தவறால் அது மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்து திகைத்தான். ஆகையால், தேர்வர்களே அதிர்ஷ்டத்தை விட உண்மையும் , உழைப்பையும் நம்புங்கள் என்று சொல்லி அமைச்சர் தனது உரையை முடித்தார்
இந்த, ஊக்குவிப்பு முகாமை தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் இயங்கும் அண்ணா இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.