ராஜ்யசபாவில் புதன்கிழமை ஒரு கேள்விக்கு பதிலளித்த கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் சமர்ப்பித்த நிதி அமைச்சகத்தின் தரவுகளின்படி, பயிற்சி மையங்களில் இருந்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல் கடந்த ஐந்து ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க:
பயிற்சி நிறுவனங்களிடமிருந்து ஜி.எஸ்.டி வசூல் 2019-20ல் ரூ.2,240.73 கோடியாக இருந்தது, 2023-24ல் ரூ.5,517.45 கோடியாக அதிகரித்துள்ளது என்று நிதியமைச்சகத்தின் வருவாய்த் துறையின் தரவைக் குறிப்பிட்டு சுகந்தா மஜும்தார் கூறினார்.
2020-21ல் இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில், 2,215.24 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. 2021-22ல் வசூல் ரூ.3,045.12 கோடியாகவும், 2022-23ல் 4,667.03 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
பயிற்சித் தொழில் "பிரமாண்டமானதா மற்றும் வேகமாக விரிவடைந்து வருகிறதா" மற்றும் "பயிற்சித் துறையின் மதிப்பிடப்பட்ட மதிப்பு மற்றும் எதிர்காலத்தில் அதன் வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறதா" என்ற கேள்விக்கு அமைச்சர் சுகந்தா மஜும்தார் இவ்வாறு பதிலளித்தார்.
கடந்த வார இறுதியில் டெல்லியில் உள்ள பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் வெள்ளம் புகுந்து யூ.பி.எஸ்.சி (UPSC) தேர்வுக்கு தயாராகி வந்த 3 பேர் உயிரிழந்ததை அடுத்து, பயிற்சி மையங்கள் மற்றும் அவை தொடர்பான பிரச்சினைகள் குறித்த கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் அரசின் பதில் என்னவென்றால், பயிற்சி மையங்களின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட்டது, மேலும் கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டிலுள்ள தனியார் பயிற்சி மையங்களில் அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலை, தீ விபத்துகள் மற்றும் வசதிகள் மற்றும் கற்பித்தல் முறைகளில் குறைபாடுகள் ஆகியவற்றை அரசாங்கம் கவனத்தில் எடுத்ததா, அவற்றின் செயல்பாடு குறித்து குறிப்பிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதா என்ற மற்றொரு கேள்விக்கு மாநிலங்களவையில் பதிலளித்த அமைச்சர் சுகந்தா மஜூம்தார், இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களை சுட்டிக்காட்டினார்.
புதன்கிழமை அமைச்சர் அளித்த பதிலில், "பயிற்சி மையங்களை வரையறுத்தல், நிபந்தனைகள் மற்றும் பதிவுக்கான தேவையான ஆவணங்களைக் குறிப்பிடுதல், கட்டணம் தொடர்பான சிக்கல்கள், பயிற்சி மையங்களை நிறுவுவதற்கான உள்கட்டமைப்பு முன்நிபந்தனைகளை கோடிட்டுக் காட்டுதல், பயிற்சி மையங்களுக்கு நடத்தை நெறிமுறைகளை நிறுவுதல்" உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களை வழிகாட்டுதல்கள் உள்ளடக்கியுள்ளது,” என்றார்.
“வழிகாட்டுதல்களில், இடையிடையே, பயிற்சி மையத்தின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்; புகார் பொறிமுறையை அறிமுகப்படுத்துதல் மற்றும் அபராதங்கள், பதிவை ரத்து செய்வதற்கான செயல்முறை மற்றும் மேல்முறையீடுகள் போன்றவை... குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வி பொது பட்டியலில் இருப்பதால், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்கள் தகுந்த சட்ட கட்டமைப்பின் மூலம் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அமைச்சர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“