ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஹெச்.ஏ.எல் நிறுவனத்தில் வேலை!

எழுத்துத் தேர்வு, கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 

HAL Assistant Recruitment 2019 : இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் என்றழைக்கப்படும், ஹெச்.ஏ.எல் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. லக்னோவில் செயல்படும் இந்நிறுவனத்திற்கு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்கள் இதற்கு தாராளமாக அப்ளை செய்யலாம்.

HAL Assistant Recruitment 2019 பணி விபரங்கள் :

மொத்த காலியிடங்கள் – 77
பணி – அட்மின் மற்றும் அக்கவுண்ட்ஸ் உதவியாளர் – 10

தகுதி – எம்.காம் பட்டபடிப்புடன் கணினி இயக்குவதில் 3 மாத சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி – Q.C, ஆய்வாளர் மற்றும் கமர்சியல் உதவியாளர் – 32

தகுதி – மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி.

பணி – சிவில் உதவியாளர் – 1

தகுதி – சிவில் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் – ரூ.11,050 முதல் 28,970 வரை

பணி – ஃபிட்டர், எலெக்ட்ரீஷியன், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக் ஆபரேட்டர்கள் – 34

தகுதி – பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவில், ஐ.டி.ஐ தேர்ச்சி.
சம்பளம் – 10,750 முதல் 27,670 வரை

வயது வரம்பு – பொதுபிரிவினருக்கு 01.02.2019 தேதியின்படி 28-க்குள் இருக்க வேண்டும். குறிப்பிடப்பட்டிருக்கும் தேதியில், உங்களது வயது 28-ஐ கடந்திருந்தால் விண்ணப்பிக்க வேண்டாம். தவிர எஸ்.சி/எஸ்.டி சமூகத்தினருக்கு வயது வரம்பு 33.

தேர்வு முறை – எழுத்துத் தேர்வு, கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்

www.hal-india.ac.in என்ற இணையதளத்தின் மூலம் பொதுப்பிரிவினர் ரூ.200 செலுத்தி இதற்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் விலக்களிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 13, விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி.

மேலும் விரிவான விபரங்களுக்கு www.hal-india.ac.in என்ற தளத்தை அணுகவும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Education-jobs news in Tamil.

×Close
×Close