அரசுப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு: செங்கோட்டையன் அறிவிப்பு

Half Yearly Exams postponed in TN Govt.Schools : தமிழக அரசுப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. ஏ செங்கோட்டையன் தெரிவித்தார்.

Half Yearly Exams postponed in TN Govt.Schools:  தமிழக அரசுப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. ஏ செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் பொதுப்பணியாளர் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், “அரசுப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டிருக்கின்றன. தனியார் பள்ளிகள்  ஆன்லைன் மூலம்  அரையாண்டு தேர்வை நடத்த விரும்பினால் ஆட்சேபனை இல்லை” என்று தெரிவித்தார்.

மேலும், தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு அரசுத்தொகை வழங்க இன்றே உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
சென்னை மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களில் மழலையர் பள்ளி, தொடக்க மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார ஆணைகளை திருவேற்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கி பேசிய அவர், அதிக கட்டணம் வசூலித்த 14 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் 1,0 11, மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அரசு சரியாக செயல்படுவதால் பள்ளி கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தேவையில்லை என்று கூறிய அமைச்சர் செங்கோட்டையன், 50% பாட குறைப்பு செய்து நடத்தப்படும் பாடங்களில் இருந்து மட்டும்தான் தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவித்தார்.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Half yearly exams postponed in tn govt schools private schools may conduct exams in online

Next Story
1.4 லட்சம் காலிப் பணியிடங்கள் : டிசம்பர் 15ம் தேதி முதல் ரயில்வே வாரிய தேர்வுகள்TNPSC Annual Planner , TNPSC Exam Notification
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com