Advertisment

HCL பயிற்சியுடன் வேலை: பிளஸ் 2 படித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்

ஹெச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி; 12-ம் வகுப்பு முடித்த பள்ளி மாணவர்கள் கலந்துக் கொள்ளலாம்

author-image
WebDesk
New Update
HCL பயிற்சியுடன் வேலை: பிளஸ் 2 படித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஹெச்.சி.எல் நிறுவனத்தின் வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி திட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.சி.எல் நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநரகம் இணைந்து ஓராண்டு பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: அடமானம் இல்லாமல் கல்வி கடன் பெறுவது எப்படி?

இதுகுறித்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஹெச்.சி.எல் நிறுவனம் (HCL Technologies) வழங்கும் வேலைவாய்ப்புடன் கூடிய ஓராண்டு பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தகுதிகள்

அதன்படி 2021-22-ம் ஆண்டு கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்பில் 60 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம். தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், அரசுப் பள்ளி மாணவர்கள் 2,000 பேருக்கு HCL Techbee “Early career program” திட்டத்துக்கான பயிற்சிக் கட்டணம் முழுவதையும் வழங்குகிறது.

ஊக்கத்தொகை

இந்த பயிற்சியின்போது 7-வது மாதம் முதல் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

பணியில் சேர்ந்தவுடனே தொடக்க நிலை ஊதியமாக ஆண்டுக்கு ரூ.1.70 லட்சம் முதல் 2.20 லட்சம் வரை (பணிநிலைக்கு ஏற்ப) தரப்படும். இதுதவிர ஹெச்.சி.எல் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே உயர்கல்வியையும் தொடர முடியும். அதற்கான கல்விக் கட்டணத்தின் ஒரு பகுதியை ஹெச்.சி.எல் நிறுவனம் வழங்கும்.

இந்த திட்டத்தின் தேர்வு முகாம் இன்று (அக்டோபர் 30) சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நடத்தப்படுகிறது.

இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் http://bit.ly/HCLTB-Tamilnadu என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை சென்னை – 88079 40948, மதுரை – 9788156509, திருநெல்வேலி– 98941 52160, திருச்சி – 94441 51303, கோவை, ஈரோடு, திருப்பூர் – 89032 45731, 98659 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விளக்கங்களைப் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Education
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment