மதுரையில் இயங்கி வரும் பிரபல ஐ.டி நிறுவனமான ஹெச்.சி.எல் நிறுவனத்தில் (HCL) க்ளவுட் இன்ஜினியர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி ஐ.டி நிறுவனங்களில் ஒன்று ஹெச்.சி.எல். இந்த நிறுவனத்திற்கு சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி எனப் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் ஹெ.சி.எல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில், ஹெ.சி.எல் நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மதுரை ஹெ.சி.எல் நிறுவனத்தில் க்ளவுட் இன்ஜினியர் (Cloud Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு முதன்மை திறனாக அசூர் ஏ.டி.எஃப் (Azure ADF) தெரிந்து வைத்திருக்க வேண்டும். கூடுதலாக நோடு (Node.js), பைத்தான் (Python) ஆகியவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் டெவலப்பர் டீமுக்கு டெக்னிக்கல் ரீதியாக கைடன்ஸ் (Guidance) செய்ய வேண்டும். பணியை பெறுவோர் ஹைப்பிரிட் (Hybrid) முறையில் வேலை செய்யலாம். அதாவது வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திலும், 2 நாட்கள் வீட்டில் இருந்தும் பணி செய்ய முடியும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் ஹெ.சி.எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம்.
தற்போதைய அறிவிப்பின்படி இந்த பணிக்கு மதுரையில் 2 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் லிங்க்ட்இன் பக்கத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் முடிந்தவரை விரைவாக விண்ணப்பித்துக் கொள்வது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“