Advertisment

'மார்க் சீட் வேணுமா, ரூ.500 கொடு': மிரட்டும் தலைமை ஆசிரியர்: திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாவட்டத்தில் டிசி வாங்க மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் ஒருவர் ரூ.500 கேட்டு மிரட்டும் சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

author-image
WebDesk
Jun 02, 2023 12:33 IST
New Update
மிரட்டும் தலைமை ஆசிரியர்

மிரட்டும் தலைமை ஆசிரியர்

பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாவட்டத்தில் டிசி வாங்க மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் ஒருவர் ரூ.500 கேட்டு மிரட்டும் சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. இது குறித்த விபரம் வருமாறு;

Advertisment

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே வளநாடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில், பள்ளி மாற்றுச் சான்றிதழ் (டிசி) வழங்குவதற்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பணம் கேட்கவே அதை கொடுக்க விரும்பாத மாணவர்கள் நாலு பேர் ஆசிரியர்கள் பணம் கேட்கும் காட்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்த மாணவர்கள் நான்கு பேரும் 2019-2020ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள். அவர்கள் ஆண்டு இறுதி தேர்வை எழுதாமல் கொரோனா காரணமாக தேர்ச்சி பெற்றவர்கள் என்பதால் அடுத்த வகுப்பில் சேரும்போது அவர்களது வருடாந்திர கல்வித் தரத்தை பொறுத்து தோராயமாக மதிப்பெண்கள் வழங்கி டிசி வழங்க வேண்டும்.

இந்த மாணவர்கள் நான்கு பேரும் தற்போது ஐடிஐ சேர்வதற்கு இந்த மதிப்பெண்கள் தேவைப்படுகின்றன என்பதால் அதை கேட்டு பள்ளியை அணுகியபோது தான் தலைமை ஆசிரியர் தலா 500 ரூபாய் பணம் கேட்டுள்ளார். 'எங்களிடம் பணம் இல்லை' என்று அவர்கள் சொல்லவே, ஒவ்வொருவரும் தலா இரண்டு A4 பேப்பர் பண்டல்கள் வாங்கி வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார் தலைமை ஆசிரியர். அடுத்து அவர்கள் செய்தது அசாதாரணமான காரியம்... ஒரே ஒரு பண்டல் மட்டும் வாங்கிக் கொண்டு போனவர்கள், கையில் கொண்டு போன செல்போனில் வீடியோவை பதிவு செய்துள்ளார்கள்.

அதில் ஆசிரியர்கள் மாணவர்களை பணம் கேட்டு திட்டுவது பதிவாகியுள்ளது. ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கும் தலைமை ஆசிரியர் இன்னொரு ஆசிரியையை அழைத்து, 'இந்த நாலு எருமை மாடுகளையும் வெளியே விரட்டுங்கள்' என்கிறார். ' இவனுக ஐடிஐயும் படிக்க வேண்டாம், ஒரு மண்ணாங்கட்டியும் படிக்க வேண்டாம்' என்கிறார்.

'காசு இல்ல டீச்சர். அதனால்தான் ஒன்னே ஒன்னு வாங்கிட்டு வந்தோம்' என்று மாணவர்கள் கெஞ்சுகிறார்கள். அதற்கு அந்த ஆசிரியை 'காசு இல்லைன்னா 10, 12, 13 மார்க் போட்டு தரட்டுமா?' எனக் கேட்கிறார். 'இவங்களுக்கு இது போதும்' என்று தலைமை ஆசிரியர் சொல்வதோடு 'போங்கடா போங்க' என்று விரட்டுகிறார்.

மாணவர்கள் காசு இல்லை என கெஞ்சுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த வீடியோ தற்போது பள்ளிக் கல்வித் துறை கவனத்திற்கும் சென்றுள்ளது அடுத்து என்ன நடக்குமோ என்று பள்ளி வட்டாரம் அதிர்ச்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment