பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை நடக்கும் இயல்பான நிகழ்வு பீரியட்ஸ் எனப்படும் மாதவிடாய். இந்த மாதவிடாய் நேரத்தில் இரத்தபோக்குடன் அதிக வலியையும் பெண்கள் அனுபவிப்பர். ஆனால் சில எளிய மருத்துவ குறிப்புகளைப் பின்பற்றினால் இந்த மாதவிடாய் வலியை வெகுவாக குறைக்கலாம்.
Advertisment
மாதவிடாய் வலியை குறைக்க என்ன சாப்பிட வேண்டும்? என்ன உடற்பயிற்சி செய்ய வேண்டும்? என்பது குறித்து டாக்டர் பொற்கொடி தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
வீடியோவின்படி, இளம் வயது பெண்கள் முதல் நடுத்தர வயது பெண்கள் வரை எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை மாதவிடாய் வலி. அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அதில் ஒரு துண்டு இஞ்சியை சீவிப் போட்டு கலந்து சாப்பிட்டு வந்தால் இந்த மாதவிடாய் வலி குறையும்.
அடுத்ததாக விளக்கெண்னெய்யை அடிவயிற்றில் தடவி, வட்டமாக 3 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யும்போது மாதவிடாய் வலி குறையும். மேலும் இரவு தூங்கப்போகும் முன் தொப்புளில் 2-3 சொட்டு விளக்கெண்னெய் போட்டு தூங்கும்போது வலி குறையும்.
Advertisment
Advertisements
அடுத்து எளிதான உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் வலியை குறைக்கலாம். சிறிய நடைபயிற்சி, ஸ்குவாட்ஸ், கேட் கௌ போஸ், சைல்ட் போஸ் போன்ற எளிய உடற்பயிற்சிகளை செய்வதன் மூலமும் வலியைக் குறைக்கலாம்.