இந்தியாவில் உள்ள போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) வெளியிட்டுள்ளது. போலி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசு உயர்கல்வித் துறைகள் / முதன்மைச் செயலாளர்கள் மற்றும் மாநிலங்களுக்கு யு.ஜி.சி கடிதம் எழுதியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Here’s state-wise list of fake universities
யு.ஜி.சி சட்டம், 1956 இன் பிரிவு 2(எஃப்) அல்லது பிரிவு 3 இன் அர்த்தத்தில் உள்ள “பல்கலைக்கழகம்” அல்ல, ஆனால் பட்டங்களை வழங்குவது அல்லது "பல்கலைக்கழகம்" என்ற வார்த்தையை அதன் பெயருடன் பயன்படுத்தி அப்பாவி மாணவர்களை ஏமாற்றி, போலியான பட்டங்களை வழங்கி ஏமாற்றுவது உள்ளிட்ட போலிப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் உங்கள் நிறுவனம் இடம்பெற்றுள்ளது என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் நிறுவனத்தின் மோசடி செயலுக்கு பல மாணவர்கள் பலியாகி வருவதால் இது கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது” என்று யு.ஜி.சி செயலர் மணீஷ் ஜோஷி இந்த நிறுவனங்களின் துணைவேந்தர்களுக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதியுள்ளார்.
போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல்
ஆந்திரப் பிரதேசம்
கிறிஸ்து புதிய ஏற்பாடு பல்கலைக்கழகம் (Christ New Testament Deemed University)
இந்திய பைபிள் திறந்த நிலை பல்கலைக்கழகம் (Bible Open University of India)
டெல்லி
அகில இந்திய பொது மற்றும் உடல் நல அறிவியல் நிறுவனம் (AIIPHS) மாநில அரசு பல்கலைக்கழகம் (All India Institute of Public & Physical Health Sciences (AIIPHS) State Government University)
வணிக பல்கலைக்கழகம் லிமிடெட். (Commercial University Ltd.)
ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் (United Nations University)
தொழிற்கல்வி பல்கலைக்கழகம் (Vocational University)
ADR-சென்ட்ரிக் ஜூரிடிகல் பல்கலைக்கழகம் (ADR-Centric Juridical University)
இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம் (Indian Institute of Science and Engineering)
சுயவேலைவாய்ப்புக்கான விஸ்வகர்மா திறந்தநிலை பல்கலைக்கழகம் (Viswakarma Open University for Self-Employment)
அத்யாத்மிக் விஸ்வவித்யாலயா (ஆன்மிக பல்கலைக்கழகம்) (Adhyatmik Vishwavidyalaya (Spiritual University))
கர்நாடகா
படகன்வி சர்க்கார் உலக திறந்த பல்கலைக்கழக கல்வி சங்கம் (Badaganvi Sarkar World Open University Education Society)
கேரளா
செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம் (St. John’s University)
மகாராஷ்டிரா
ராஜா அரபு பல்கலைக்கழகம் (Raja Arabic University)
புதுச்சேரி
ஸ்ரீ போதி அகாடமி ஆஃப் ஹயர் எஜுகேஷன் (Sree Bodhi Academy of Higher Education)
உத்தரப்பிரதேசம்
காந்தி ஹிந்தி வித்யாபீடம் (Gandhi Hindi Vidyapith)
எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி தேசிய பல்கலைக்கழகம் (National University of Electro Complex Homeopathy)
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பல்கலைக்கழகம் (திறந்த நிலை பல்கலைக்கழகம்) (Netaji Subhash Chandra Bose University (Open University))
பாரதிய சிக்ஷா பரிஷத் (Bhartiya Shiksha Parishad)
மேற்கு வங்காளம்
இந்திய மாற்று மருத்துவ நிறுவனம் (Indian Institute of Alternative Medicine)
மாற்று மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Institute of Alternative Medicine and Research)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.