2018-19 கிற்கான அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பின் பிரகாரம் நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களின் எண்ணிக்கை 2018-19ல் 14,16,299 ஆக இருந்தது. இந்த கணக்கெடுப்பு உயர்கல்வி நிறுவனங்களில் இருக்கும் ஆசிரியர்களின் பாலினம்சமத்துவ மற்றும் சமூக பொருளாதார சூழ்நிலைகள் பற்றியும் நிறையத் தகவல்களையும் வெளிப்படுதிகின்றன.
14.16 லட்சம் உயரக் கல்வி ஆசிரியர்களில் 57.85 சதவீதம் ஆண்கள், 42.15 சதவீதம் பெண்கள். பீகாரில் ஆசிரியர்களிடையே பெண்-ஆண் விகிதம் 1: 4, அல்லது சதவீதம் அடிப்படையில் 21:79 ஆகும். ஜார்கண்ட் தோராயமாக 30:70 என்ற விகிதத்துடன் இரண்டாவது இடத்தில் வருகிறது. உத்தரபிரதேசத்தில், ஆசிரியர்களில் மொத்தமுள்ள ஆசிரியர்களில் மூன்றில் ஒரு பங்கிற்க்கும் குறைவாகவே(32.3%) பெண்கள் உள்ளனர்.
ஆனால் , கேரளா, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், மேகாலயா, நாகாலாந்து, டெல்லி மற்றும் கோவா போன்ற மாநிலங்களில் பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆண் ஆசிரியர்களை விட அதிகமாக உள்ளது.
அகில இந்திய மட்டத்தில், இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த உயர்க்கல்வி ஆசிரியர்களின் கணக்கில் பொது பிரிவைச் சேர்ந்தவர்களே பாதிக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர் (56.7 சதவீதம்). ஓபிசிக்கள் 32.1 சதவீதத்துடன், பட்டியல் சாதியினர் 8.8 சதவீதத்துடன் மற்றும் பட்டியல் பழங்குடியினர் 2.4 சதவீதத்துடன் இருக்கின்றனர் .
உயரக் கல்வி ஆசிரியர்களில் முஸ்லிம் சிறுபான்மையைச் சேர்ந்தவர்களில் 5.4 சதவீதம் பேரும் , 9.2 சதவீதம் பேர் மற்ற சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.
ஆந்திரா (13.83 சதவீத எஸ்சி மற்றும் 1.6 சதவீத எஸ்டி), மகாராஷ்டிரா (11.39 சதவீதம் எஸ்சி மற்றும் 1.52 சதவீத எஸ்டி) மற்றும் தெலுங்கானா (11.17 சதவீதம் எஸ்சி மற்றும் 3.5) சதவீதம் எஸ்.டி.க்கள்) போன்ற மாநிலங்கள் அதிக எஸ்சி/எஸ்டி கொண்ட மாநிலங்களாக இருக்கின்றது.
100 ஆண் ஆசிரியர்களுக்கு எத்தனை பெண் ஆசிரியர்கள் உள்ளனர் என்ற மற்றொரு பாலின விகிதக் கணக்கு இந்த கணக்கெடுப்பில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.
அகில இந்தியாவைப் பொறுத்தவரையில், 100 ஆண் ஆசிரியர்களுக்கு 73 பெண் ஆசிரியர்கள் உள்ளனர். இந்த விகிதம் பட்டியல் சாதிக்குள் 57: 100 என்ற விகிதத்திலும், எஸ்டி மற்றும் ஓபிசி இரண்டிலும் 68: 100 என்ற விகிதத்திலும் உள்ளது . முஸ்லிம்களைப் பொறுத்தவரை, 100 ஆண் ஆசிரியர்களுக்கு 57 பெண் ஆசிரியர்களே உள்ளனர். மற்ற சிறுபான்மையினரைப் பொறுத்த வரையில் பெண் ஆசிரியர்கள் ஆண் ஆசிரியர்களை விட 151: 100 என்ற விகிதத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
கல்லூரிகளில், பெண் ஆசிரியர்களை விட ஆண் ஆசிரியர்கள் பெரும்பாலும் உயர் பதவிகளில் இருக்கின்றனர். ஆனால், விரிவுரையாளர் மற்றும் டூயுடர்( tutor ) போன்ற சிறிய பணிகளில் ஆண்: பெண் விகுதம் 190: 100 என்ற கணகில் உள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண் விரிவுரையாளருக்கும் கிட்டத்தட்ட இரண்டு பெண்கள் உள்ளனர். தற்காலிக ஆசிரியர்கள் கணக்கில் 100 ஆண்களுக்கு 98 பெண்கள் என்ற சமமான விகிதத்திலே உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.