scorecardresearch

டாடா நிறுவனத்தில் பெண்களுக்கு அருமையான வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

டாடா நிறுவன வேலைவாய்ப்பு; 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம்; உயர்கல்வி வாய்ப்பும் உண்டு

டாடா நிறுவனத்தில் பெண்களுக்கு அருமையான வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

தமிழ்நாட்டின் ஒசூரில் செயல்பட்டு வரும் டாடா நிறுவனத்தில் இருந்து அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெண்களுக்கான இந்த வேலைவாய்ப்புக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்தியாவின் முன்னணி தனியார் தொழில்துறை நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனம் இளம்பெண்களுக்கான அருமையான வேலைவாய்ப்பை வழங்க உள்ளது. மேலும் விருப்பமுள்ளவர்கள் உயர்க் கல்வியும் கற்கலாம். இந்த சூப்பரான வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை இப்போது பார்ப்போம்.

இதையும் படியுங்கள்: தமிழக ரேசன் கடை வேலை வாய்ப்பு; 4000 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

இளநிலை தொழில் நிபுணர்கள்

கல்வித்தகுதி : 2021, 2022 ஆண்டுகளில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத்தகுதி : 18 வயது முதல் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

தொடக்கநிலை சம்பளம் : மாதம் ரூ.16.557 மற்றும் போனஸ்.

உயரம்: குறைந்தபட்சம் 145 செ.மீ இருக்க வேண்டும்.

எடை : குறைந்தபட்சம் 43 கிலோ முதல் அதிகபட்சம் 65 கிலோ வரை

வேலைக்கான பயிற்சி: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 12 நாள் தீவிர பயிற்சி அளிக்கப்படும். இந்த அத்தியாவசியப் பயிற்சித் தொகுப்பை வெற்றிகரமாக முடித்த பயிற்சியாளர்களுக்கு வேலை வாய்ப்பு நியமனக் கடிதங்கள் வழங்கப்படும்.

பணியாளர்களுக்கான நலத்திட்டங்கள்:

இது நிரந்தர வேலை வாய்ப்பு, வேறு ஒப்பந்தமோ, பத்திரமோ இல்லை

நம்பிக்கைக்குதகுந்த மற்றும் பாதுகாப்பான பணிச்சூழல்

தேவையான வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான தங்குமிடங்கள்

ஒழுங்குமுறை சட்டங்களுக்குட்பட்ட அனைத்து நலத்திட்டங்கள் (PF/ Gratuity/ ESI போன்றவை)

மேற்படிப்பிற்கான வாய்ப்பு: TEPL நிறுவனத்தின் ஒரு வருட அனுபவத்திற்குப் பிறகு இளநிலை தயாரிப்பில் பட்டப்படிப்பில் சேரும் வாய்ப்பு இதில் கிடைக்கும்

கற்றுக்கொள்வதற்கான சூழல்: விரைந்து மாறி வரும் தொழில் உலகில் பணியாற்றும் பொழுதே பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறவும், புதுமை மிகு இயந்திரங்களை இயக்கி தெரிந்துக் கொள்ளவும், மெய் நிகர் யதார்த்தத்தின் உதவியுடன் மெருகுட்டும் கல்வி வாய்ப்புகளை பெறவும் இது அருமையான வாய்ப்பாகும்.

முன்பதிவு: தமிழ்நாட்டில் பல இடங்களில் வேலைக்காக முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அக்டோபர் 14 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

நேரம்: குறிப்பிட்ட இடங்களில் காலை 8 மணி முதல் காலை 10 மணி வரை முன்பதிவு நடைபெறவுள்ளது.

தேவையான ஆவணங்கள்:

மாற்றுச்சான்றிதழ் TC

10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

ஆதார் அட்டை

மேற்கூறிய ஆவணங்களின் நகல் மற்றும் அசலை முன்பதிவு செய்யும் போது எடுத்துச் செல்ல வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Hosur tata enterprise recruitment 2022 for girls jobs opportunity apply soon