தேசிய தேர்வு முகமை(என்.டி.ஏ) அக்டோபர் முதல் வாரத்திற்குள் நீட் தேர்வு முடிவை அறிவிக்கிறது. முடிவை அறிவிப்பதற்கு முன், தேர்வுக்கான விடைகளை(ஆன்சர் கீ) என்.டி.ஏ வெளியிடும்.
தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களுக்கு இவ்விடைகள் குறித்து ஏதேனும் மறுப்பு இருப்பின் அது குறித்த சவால் செய்யலாம். சரியான சவால்கள் பரிசீலிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்படும். தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் தாங்கள் எழுதிய விடைகளோடு ஒப்பிட்டு மதிப்பீடு செய்துகொள்ள ஏதுவாக அமையும்.
நீட் தேர்வு முடிவுகள் மூன்று முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது. கட்- ஆப் மதிப்பெண்கள், ஒட்டுமொத்த மதிப்பெண்கள், 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடிற்கான (AIQ) மதிப்பெண்.
முதலாவதாக, நீட் நுழைவுத் தேர்வு மூலம் ஒட்டுமொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படுகின்றன. இது சதவீத மதிப்பெண்ணாக மாற்றப்படுகிறது. சதவீதம் மதிப்பெண்ணின் அடிப்படையில் அகில இந்திய ஒதுக்கீட்டு தரவரிசை செய்யப்படுகிறது.
மூன்று பிரிவுகளில் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக NEET ஸ்கோர்கார்டில் சதவீதம் மதிப்பெண் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் ஒட்டுமொத்த சதவிகித மதிப்பெண் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
15 சதவீத அகில இந்திய மருத்துவ கலந்தாய்வுக்கு தகுதி பெறும் அடிப்படை மதிப்பெண்களைத் தீர்மானிக்க கட் ஆஃப் மதிப்பெண்கள் பயன்படுத்தப்படுகிறது. பொதுப் பிரிவு / பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் 50 சதவிகிதமாக உள்ளன. எஸ்சி / எஸ்டி / ஓபிசி பிரிவினருக்கு 40 சதவீதமும், PWBD பிரிவு மாணவர்களுக்கு 45 சதவீதமும் ஆகும்.
number of candidates appeared in the exam with raw score less than the candidate) / Total number of candidates appeared in the examination என்ற நன்கு வரையறுக்கப்பட்ட பார்முலா அடிப்படையில் கட் ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிடப்படுகிறது. நீட் கட்-ஆப் சதவீதம் மூலம், பிற தேர்வர்களை ஒப்பிடும் போது, தேர்வில் ஒரு குறிப்பிட்ட தேர்வரின் செயல்திறன் விகிதம் குறித்த ஒப்பீட்டை பெறலாம்.
அதே நேரத்தில், ஒட்டு மொத்த மதிப்பெண்கள் என்பது, ஒரு குறிப்பிட்ட தேர்வர் 720 என்ற மொத்த மதிப்பெண்ணில் பெற்ற அளவை குறிக்கிறது. ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு தவறான பதில்களுக்கும் 1 மதிப்பெண் கழிக்கப்படுகிறது.
கடைசியாக, 15 சதவீத அகில இந்திய தரவரிசைப் பட்டியல். குறைந்தபட்ச கட்- ஆப் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்காக இந்த தரவரிசைப் பட்டியல் வழங்கப்படுகிறது. அதிக கட்- ஆப் மதிப்பெண்கள் உள்ள மாணவர்கள் தரவரிசைப் பட்டியலில் அதிக இடத்தைப் பிடிக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.