பெரியார் பல்கலை ரிசல்ட்: மறுகூட்டலுக்கு அப்ளை செய்வது எப்படி?
டிமாண்ட் டிராப்ட்டை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்த்தை “தேர்வுக் கட்டுப்பாட்டாளர்”, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் - 636 011 என்ற முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.
டிமாண்ட் டிராப்ட்டை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்த்தை “தேர்வுக் கட்டுப்பாட்டாளர்”, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் - 636 011 என்ற முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.
REVALUATION/TRANSPARENCY/ RE-TOTALING in periyar university : மாணவர்கள் நீண்ட காலம் எதிர்பார்த்த சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியானது. periyaruniversity.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தேர்வர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
Advertisment
நேற்றைய தேர்வு முடிவுகளில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருக்குமென்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று வழிமுறைகளின் மூலம் அச்சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம்.
மறுகூட்டல் (Re-totaling)
மறுமதீப்பீடு (Revaluation)
விடைத்தாள் நகலை கோரல் (Transparency)
மறுகூட்டல் என்றால் உங்கள் விடைத்தாளில் உள்ள மதிப்பெண்ணை மீண்டும் கூட்ட விண்ணப்பிப்பது (அனைத்து வினாக்களுக்கும் விடைகள் கொடுக்கப்பட்டுள்ளதா ?) இதற்கு நீங்கள் ரூ. 250 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
Advertisment
Advertisements
மறுமதீப்பீடு என்றால் உங்கள் விடைத்தாளை மீண்டும் முதலில் இருந்த புதுக் கண்ணோட்டத்தோடு திருத்த விண்ணப்பிப்பது. இதற்கு நீங்கள் ரூ. 300 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
விடைத்தாள் நகலை கோரல் என்றால் உங்களை விடைத்தாளின் ஜெராக்ஸ் கேட்டு விண்ணப்பிப்பது. இதற்கு நீங்கள் ரூ. 300 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
இதற்கான விண்ணப்பம், www.periyaruniversity.ac.in/ என்ற இணையதளத்தில் கிடைக்கின்றது. அந்த விண்ணப்பத்தில் உங்கள் பெயர், பதிவு எண், எந்த விடைத்தாள் போன்ற அடிப்படை தகவல்களை நிரப்ப வேண்டும்.
மறுகூட்டல் (Re-totaling), மறுமதீப்பீடு, (Revaluation) விடைத்தாள் நகலை (transparency) விண்ணப்பம் பெற இந்த இந்தஇந்த லிங்கை கிளிக் செய்யவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சேர்த்து உங்கள் டிமாண்ட் டிராப்ட்டையும் “தேர்வுக் கட்டுப்பாட்டாளர்”, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் - 636 011 என்ற முகவரிக்கு அனுப்புதல் வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியான 10 நாளிலிருந்து இந்த விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.