டிஎன்பிஎஸ்சி குரூப் 4 வி.ஏ.ஓ தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணபிக்கலாம். அது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.
https://www.tnpsc.gov.in/Home.aspx இந்த இணையதளத்துக்கு சென்று அப்ளை ஆன்லைன் என்பதை கிளிக் செய்யுங்கள். அதைத் தொடர்ந்து விண்ணப்பிக்க என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்க.
அதன் பிறகு, தோன்றும் பக்கத்தில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கும். தேர்வுக்கு எப்போதும் விண்ணப்பிக்க வேண்டும் கடைசி தேதி எது என்பது போன்ற விவரங்களும் இருக்கும். அறிவிப்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் இருக்கும். அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து படித்து பார்த்துக் கொள்ளுங்கள்.
அதற்கு அருகில் அப்ளை நவ் என்பதை கிளிக் செய்த பிறகு, நீங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்தவர் என்றால் உங்களுடைய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து உள்ளே நுழையுங்கள்.
இதுவரை பதிவு செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. முகப்பக்கத்துக்குச் சென்று நிரந்தப் பதிவு விவரங்கள் என்பதை கிளக் செய்யுங்க.
பின்னர் தோன்றும் திரையில் புதிய பதிவு விழைவோர் என்பதை கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளுங்கள். இதற்கு உங்கள் அடிப்படை விவரங்களை கொடுக்க வேண்டியிருக்கும்.
பதிவு செய்த பிறகு, அப்ளை செய்ய வேண்டிய பக்கத்துக்கு வந்து உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை தட்டச்சு செய்யுங்கள்.
ஏழை குடும்ப மாணவர்களுக்கு வரப்பிரசாதம்… இல்லம் தேடி கல்வி எப்படி இயங்குகிறது?
உள்நுழைந்ததும் உங்களுக்கு காட்டப்படும் பக்கத்தில் குரூப் 4 க்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும் என கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
அங்கே விண்ணப்ப விவரங்கள் என்ற பிரிவு இருக்கும். அதில் மொத்தம் 10 படிநிலைகள் கொடுக்கப்பட்டிருக்கும். விண்ணப்ப விவரங்கள், தகவல்தொடர்பு விவரங்கள், கல்வித் தகுதி விவரங்கள் போன்ற விவரங்களை நீங்கள் உள்ளீடு செய்ய வேண்டும்.
அனைத்தையும் உள்ளீடு செய்யுங்கள். அனைத்து படிநிலைகளையும் நீங்கள் பூர்த்தி செய்த பிறகு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுவிடும். அதை நீங்கள் பதிவிறக்கம் செய்தோ அல்லது பிரிண்ட் அவுட் எடுத்தோ வைத்துக் கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil