தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் விண்ணப்பம் 16.09.2021 முதல் ஆரம்பமாகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 17.10.2021. ஆனலைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://trb.tn.nic.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
முதலில் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க உங்களுக்கு செயல்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைப்பேசி எண் அவசியம். ஏனெனில் மின்னஞ்சல் மற்றும் அலைப்பேசி எண்ணிற்கு OTP வரும்.
படி 1 : முதலில் நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பணியிடத்தை தேர்ந்தெடுத்து, உங்களது சுய விவரங்களைக் கொண்டு USER ID உருவாக்க வேண்டும். இதில் OTPஐ பயன்படுத்தி மின்னஞ்சல் மற்றும் அலைப்பேசி எண்ணை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
படி 2 : இப்போது, விண்ணப்பதாரர் படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் சமர்ப்பித்த பின் ‘SUBMIT’ பட்டனை அழுத்த வேண்டும்.
படி 3 : இப்போது அனைத்து விவரங்களும் சரிப்பார்க்கப்பட்டு USER ID மற்றும் கடவுச் சொல் திரையில் தோன்றுவதோடு, மின்னஞ்சல் முகவரியிலும் கிடைக்கப்பெறும். பின்னர் இவற்றைப் பயன்படுத்தி Login செய்ய வேண்டும். முதல்முறை உள்நுழையும்போது கடவுச் சொல்லை மாற்ற வேண்டும். இந்த USER ID மற்றும் கடவுச் சொல்லை கவனமாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள்
படி 4 : அடுத்து காண்பிக்கப்படும் அறிவுரைகள் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளவற்றை நன்றாக படித்த பின் தொடர வேண்டும்.
படி 5 : இப்போது விண்ணப்ப படிவம் கீழ்கண்ட பிரிவுகளைக் கொண்டிருக்கும்
- தனியர் விவரங்கள்
- கல்வித் தகுதிகள்
- புகைப்படம் பதிவேற்றல்
- கையெழுத்து பதிவேற்றல்
- விண்ணப்பம் முற்காட்சியுறல் (ப்ரீவியூ- Preview)
- உறுதிமொழி
- கட்டணம் செலுத்துதல்
- விண்ணப்ப படிவம் பதிவிறக்கம்
தனியர் விவரங்கள் பிரிவில் உங்கள் பிறப்பிடம், பாலினம், முகவரி, விருப்பமான தேர்வு மையம், சாதிச் சான்றிதழ் விவரங்கள் ஆகியவற்றை பதிவிட வேண்டும். பின்னர் ‘SAVE & CONTINUE’ பட்டனை அழுத்தி அடுத்த பிரிவுக்குச் செல்ல வேண்டும்.
இதேபோல், கல்வித் தகுதிகள், புகைப்படம் மற்றும் கையெழுத்து பதிவேற்றம் ஆகிய பிரிவுகளை முடித்த பின்னர், உங்கள் விண்ணப்பத்தின் Preview கிடைக்கப்பெறும். அதனை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் தவறு இருப்பின் EDIT பட்டனை அழுத்தி சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஒருமுறை ‘SUBMIT’ பட்டனை அழுத்திவிட்டால், பிறகு விண்ணப்பத்தில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது.
படி 6: Preview சரிபார்த்த பின்னர் ‘PROCEED TO SUBMIT FORM’ ஐ அழுத்தி ‘SUBMIT APPLICATION FORM’ அழுத்த வேண்டும். பின்னர் வரும் ‘DECLARATION’ பக்கத்தில் உறுதிமொழியை சொடுக்கி ‘SUBMIT’ பட்டனை அழுத்த வேண்டும்.
படி 7: இதைத் தொடர்ந்து கட்டணம் செலுத்த வேண்டும்.
படி 8 : கட்டணம் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பின்னர் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு விவரங்களை பார்ப்போம்.
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 2,207
முதுகலை பட்டதாரி ஆசிரியர் : 2121
உடற்கல்வி இயக்குனர் : 42
கணினி பயிற்றுனர் : 44
வயதுத் தகுதி: 01.07.2021 அன்று 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயதுத் தளர்வு : அரசு விதிகளின்படி SC/ST/BC/MBC/BCM/DNC பிரிவுகளுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு உண்டு. மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு.
கல்வித் தகுதி :
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் B.Ed படித்திருக்க வேண்டும்.
உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கு B.P.Ed படிப்பில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணினி பயிற்றுனர் பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு அல்லது எம்.இ, எம்.டெக் படிப்புகளில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் B.Ed படித்திருக்க வேண்டும்.
கூடுதல் தகுதிகள் : தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500
SC/ST பிரிவுகளுக்கு ரூ.250
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் 110 வினாக்கள், கல்வியியலில் 30 வினாக்கள், பொது அறிவில் 10 வினாக்கள் என மொத்தம் 150 வினாக்கள் இடம்பெறும்.
தேர்வு மூன்று மணி நேரம் நடைபெறும். எழுத்துத் தேர்வு கணினி மூலம் நடத்தப்படும்.
குறைந்தப்பட்ச தகுதி மதிப்பெண்கள் : 50%, SC/SCA பிரிவுகளுக்கு 45%, ST பிரிவுக்கு 40%
முக்கிய தேதிகள்
ஆன்லைன் விண்ணப்பம் ஆரம்பிக்கும் தேதி : 16.09.2021
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.10.2021
தேர்வு நடைபெறும் தேதிகள் : 13.11.2021, 14.11.2021, 15.11.2021
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://trb.tn.nic.in/pg2021/Notification.pdf என்ற இணையதளப்பக்கத்தினை பார்வையிடவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.