TNEA Counselling 2020 Rank List : பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. தரவரிசைப் பட்டியலில் சுஷ்மிதா என்ற மாணவி முதலிடமும், நவநீதகிருஷ்ணன் என்ற மாணவர் 2வது இடமும், காவ்யா என்ற மாணவி 3வது இடமும் பிடித்துள்ளனர்.
தமிழகத்தில், இந்த ஆண்டு கலந்தாய்வு மூலம், 500க்கும் மேற்பட்ட பொறியியில் கல்லூரிகளில் உள்ள 2.64 லட்சம் இடங்ககள் நிரப்பப்படவுள்ளன.
பொறியியில் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, ஜூலை 15-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15-ம் தேதி நிறைவு பெற்றது. இதில், 1 லட்சத்து 58 ஆயிரத்து 333 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஒரே மதிப்பெண் பெற்றவர்களை வரிசைப்படுத்துவதற்கான ரேண்டம் எண்கள் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி வெளியானது.
தரவரிசைப் பட்டியலை அடுத்து, கவுன்சிலிங்கில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும். உத்தியோகபூர்வ அட்டவணையின்படி, முதலில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவ படை வீரர் பிரிவு மாணவர்கள், விளையாட்டு வீரர்களுக்கான உள் இட ஒதுக்கீடு இடங்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.
கலந்தாய்வின் போது, மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் கல்லூரியில், கட்டணம் செலுத்தி இடங்களை முன்பதிவு செய்ய வேண்டும்.
மேலும், பொறியியல் கலந்தாய்வில், ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால் ரேண்டம் எண் முறை பின்பற்றப்படுகிறது. இக்கட்டான சூழ்நிலையில், ரேண்டம் எண் அதிகமாக உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
ரேங்க் பட்டியலை செக் செய்வது எப்படி?
https://www.tneaonline.org/ என்ற வலைபக்கத்திற்கு செல்ல வேண்டும்.
கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
தரவரிசைப் பட்டியலை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil