தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் இருக்கும் மருத்துவ படிப்பு இடங்களுக்கு டிசம்பர் 19 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவிக்கப்பட்டு வெளியிட்டது. ஆன்லைனில் ஜனவரி 7ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2021-22ம் ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த 19 பட்ட படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மருத்துவ கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,276 இடங்கள், தனியார் கல்லூரிகளில் 13,832 இடங்களுக்கும் பட்டியல் வெளியிட்டுள்ளனர்.
தரவரிசை பட்டியலை டவுன்லோடு செய்வது எப்படி
step 1: முதலில் மருத்துவக்கல்வி இயக்குநரகத்தின் தேர்வுக்குழுவின் அதிகாரப்பூர்வ பக்கங்களான http://www.tnhealth.tn.gov.in அல்லது http://www.tnmedicalselection.org க்கு செல்ல வேண்டும்
step 2: ஹோம்பேஜ்ஜில் Tamilnadu Rank List 2021 என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
step 3: உடனடியாக பிடிஎஃப் பார்மட்டில் தரவரிசை பட்டியில் திரையில் தோன்றும். அதில், உங்களின் பெயர் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும்.
step 4: உங்களின் பெயர் இருக்கும் பட்சத்தில், நிச்சயம் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பு உங்களுக்கு தெரிவிக்கப்படும்.
step 5: எதிர்கால தேவைக்காக தரவரிசைப்பட்டியலை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம்.
தரவரிசை பட்டியிலில் இடம்பெறும் விவரங்கள்
- அப்லிகேஷன் நம்பர்
- பெயர்
- வகுப்பு பிரிவு
- நீட் மார்க்
- ரேங்க் எண்
வருகிற 22-ந் தேதி ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கலந்தாய்வும், அதனை தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil