நாளுக்கு நாள் வங்கி மோசடி அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்கள் இந்த மோசடி கும்பலிடம் சிக்கி, பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். நாட்டின் மிகப்பெரும் வணிக வங்கியான ஸ்டேட் பேங்க், மோசடி கும்பலிடமிருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. அதோடு அந்த கும்பலிடம் இருந்து தங்களது வங்கிக் கணக்கை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதற்கான வழிமுறைகளையும் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தியிருக்கிறது எஸ்.பி.ஐ.
மோசடி கும்பலிடமிருந்து தப்பிக்க...
யாரிடமும் உங்களது எஸ்.பி.ஐ கார்டை கொடுக்காதீர்கள்.
ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கும் போது, பின் நம்பர் தெரியாதவாறு கீ பேடை மறைத்துக் கொள்ளுங்கள்.
அட்டையை எப்போதும் நீங்களே பயன்படுத்துங்கள்.
பணம் எடுத்து முடிந்ததும், மறக்காமல் கார்டை எடுத்துச் செல்லுங்கள்.
எஸ்.பி.ஐ வங்கி ஊழியர் எனக் கூறி பேசும் நபர் உட்பட யாரிடமும் எக்காரணத்திற்காகவும் உங்களது தகவல்களை சொல்லாதீர்கள்.
ஸ்வைப்பிங் மெஷினில் கார்டை ஸ்வைப் செய்வதை விட, செருகி பயன்படுத்த முற்படுங்கள்.
பொதுத்துறை வங்கியின் அறிவுறுத்தல்
எஸ்.பி.ஐ அட்டையின் பின் நம்பர் மற்றும் ஒரு முறை கடவுச்சொல்லை யாரிடமும் பகிற வேண்டாம்.
CVV மற்றும் பிற தகவல்களை கூற வேண்டாம்.
எஸ்.பி.ஐ வங்கியின் ஆன்லைன் யூசர் ஐ.டி மற்றும் பாஸ்வேர்டை பிற நபரிடம் தெரிவிக்க வேண்டாம்.
ஒரு வேளை மோசடி நடந்துவிட்டால்
எஸ்.பி.ஐ வங்கியின் 24 மணி நேர கால் சென்டரை தொடர்புக் கொள்ளவும்
customercare@sbicard.com என்ற முகவரிக்கு, மோசடி விபரத்தினை உடனடியாக தெரியப்படுத்தவும். அல்லது www.sbicard.com/email என்ற தளத்தை அணுகவும்.


எஸ்.பி.ஐ கார்ட் மற்றும் பேமண்ட் சர்வீசஸ் (பி) லிமிடெட்,
DLF இன்ஃபினிட்டி டவர்ஸ், டவர் சி, 12-வது தளம், ப்ளாக் 2, பில்டிங் 3,
DLF சைபர் சிட்டி, குர்கான் - 122002 (ஹரியானா) இந்தியா
ஃபேக்ஸ் - 0124-2567131.
என்ற முகவரிக்கு போஸ்ட் / கொரியர் / ஃபேக்ஸ் மூலமாகவும் வாடிக்கையாளர்கள், எஸ்.பி.ஐ சேவை மையத்தை தொடர்புக் கொள்ளலாம்.
“Problem” என டைப் செய்து 9212500888 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்.
Twitter@SBICard_Connect என்ற முகவரியில் ட்விட்டரில் தொடர்புக் கொள்ளலாம்.
அருகிலுள்ள எஸ்.பி.ஐ வாடிக்கையாளர் மையத்துக்கு நேரில் செல்லலாம்.