10ம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை தனித்தேர்வர்கள் இன்று மதியம் 2 மணி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வரும் 27 முதல் 29 வரை நடைபெற உள்ள செய்முறைத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் கட்டாயமாகும். அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளன.
ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் முறை:
- முதலில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அங்கு “HALL TICKET” என்பதை கிளிக் செய்தால், அடுத்து தோன்றும் பக்கத்தில் “SSLC PUBLIC EXAMINATION MAY 2022 - HALL TICKET DOWNLOAD” என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- அதில், ண்ணப்ப எண் (Application Number) / நிரந்தரப் பதிவெண் (Permanent Register Number) மற்றும் பிறந்த தேதியினை பதிவிட வேண்டும்.
அவ்வளவு தான், ஹால்டிக்கெட் டவுன்லோட் ஆகிவிடும். அதனை, print out எடுத்து தேர்வுக்கு கொண்டு செல்லலாம்.
10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மே 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. மேலுக்கும் இதற்கான தேர்வு முடிவுகள் ஜூன் 17 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil